102 ரன்ஸ்.. ஹர்மன்ப்ரீத் மிரட்டல், க்ராந்தி அபார சாதனை.. இங்கிலாந்தில் இந்திய மகளிரணி வரலாறு காணாத 2 வெற்றி

Ind vs Eng womens
- Advertisement -

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அங்கு முதலாவதாக நடைபெற்ற டி20 தொடரை 3 – 2 (5) என்ற கணக்கில் வென்றது. அதன் வாயிலாக இங்கிலாந்துக்கு எதிராக முதல் முறையாக ஒரு டி20 தொடரை வென்று இந்திய மகளிரணி வரலாறு காணாத படைத்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது.

2 போட்டிகளின் முடிவில் 1 – 1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த அத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது போட்டியில் ஜூலை 22ஆம் தேதி நடைபெற்றது. இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு செஸ்டர்-லே-ஸ்ட்ரீட் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு 64 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த பிரதிகா ராவல் 26 ரன்னில் அவுட்டானார்.

- Advertisement -

ஹர்மன்ப்ரீத் மிரட்டல்:

அவருடன் சேர்ந்து விளையாடிய மந்தனா அரை சதத்தை நழுவ விட்டு 45 ரன்களில் அவுட்டானார். அடுத்ததாக கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் – ஹர்லின் தியோல் ஆகியோர் ஜோடி சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதில் தியோல் 45 ரன்னில் அவுட்டான போதிலும் மறுபுறம் அசத்திய ஹர்மன்பிரித் அரை சதத்தை அடித்தார்.

அடுத்து வந்த ஜெமிமா தனது தம்முடைய பங்கிற்கு 4வது விக்கெட்டுக்கு 110 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 50 (45) ரன்கள் விளாசி அவுட்டானார். இந்தப் பக்கம் டெத் ஓவர்களில் மிரட்டலாக விளையாடிய ஹர்மன்ப்ரீத் 14 பவுண்டரியுடன் சதத்தை அடித்து 102 (84) ரன்கள் குவித்து அவுட்டானார். இறுதியில் ரிக்சா கோஸ் அதிரடியாக 38* (18) ரன்கள் எடுத்த உதவியுடன் 50 ஓவரில் 318/5 ரன்களை குவித்தது.

- Advertisement -

இரட்டை வெற்றி:

அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்து முடிந்தளவு போராடியும் 49.5 ஓவரில் 305 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்த அணிக்கு துவக்க வீராங்கனைகள் எமி ஜோன்ஸ் 4, டம்மி பியூமோண்ட் 2 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். மிடில் ஆர்டரில் எம்மா லேம்ப் 68, கேப்டன் நட் ஸ்கீவர் 98 ரன்கள் எடுத்துப் போராடினார்கள். ஆனால் லோயர் ஆர்டரில் சோபி டுங்லி 34, அலிஸ் ரிச்சர்ட்ஸ் 44, சார்லி டீன் 21 ரன்கள் எடுத்த போதிலும் ஃபினிஷிங் செய்யத் தவறினார்கள்.

அதனால் 13 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்ற இந்தியா 2 – 1 (3) என்ற கணக்கில் தொடரை வென்றது. இதன் வாயிலாக இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் ஒரே சுற்றுப்பயணத்தில் டி20, ஒருநாள் தொடர்களில் முதல் முறையாக தோற்கடித்து இந்திய மகளிரணி மற்றுமொரு வரலாறு காணாத சாதனை வெற்றியைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: பென் ஸ்டோக்ஸ் மாதிரி.. அது 40% இருந்தா கூட ஜடேஜா பெரிய மேட்ச் வின்னரா வந்துருப்பாரு.. ரவி சாஸ்திரி ஆதங்கம்

இந்திய அணிக்கு அதிகபட்சமாக கிராந்தி கௌட் 6, ஸ்ரீ சரிணி 2 விக்கெட்டுகளை எடுத்தார். இப்போட்டியில் இர்பான் பதானுக்கு பின் ஒருநாள் கிரிக்கெட்டில் இளம் வயதில் 6 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை கிராந்தி கௌட் (18 வருடம் 179 நாட்கள்) வருடம் படைத்துள்ளார்.

Advertisement