81/6 என சரிந்த வங்கதேசம்.. தனி ஒருவனாக மாஸ் காட்டிய முகமதுல்லா.. தெ.ஆ திணறியது எப்படி

RSA vs BAN
- Advertisement -

இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 24ஆம் தேதி மும்பையில் மதியம் மணிக்கு நடைபெற்ற 23வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு ரீசா ஹென்றிக்ஸ் 12 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த வேன் டெர் டுஷன் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய குயிண்டன் டீ காக்’குடன் அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் ஹைடன் மார்க்ரம் ஜோடி சேர்ந்து வங்கதேச பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டார். அந்த வகையில் 3வது விக்கெட்டுக்கு 131 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய இந்த ஜோடியில் கேப்டன் மார்க்ரம் 60 ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்ததாக வந்த ஹென்றிச் கிளாசின் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடினார்.

- Advertisement -

அவருடனும் இணைந்து மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய டீ காக் 4வது விக்கெட்டுக்கு 142 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 15 பவுண்டரி 7 சிக்ஸருடன் 174 (140) விளாசி உலகக்கோப்பையில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த விக்கெட் கீப்பராக சாதனை படைத்து ஆட்டமிழந்தார். இறுதியில் டெத் ஓவர்களில் அதிரடியாக விளையாடிய கிளாஸின் 2 பவுண்டர் 8 சிக்ஸருடன் 90 (49) ரன்களும் டேவிட் மில்லர் 1 பவுண்டரி 4 சிக்சருடன் 34* (15) ரன்களும் எடுத்ததால் 50 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா 382/5 ரன்கள் எடுத்தது.

சுமாராக செயல்பட்ட வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக ஹசன் முகமது 2 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 383 என்ற பெரிய இலக்கை துரத்திய வங்கதேசத்திற்கு தன்சித் ஹசனை 12 ரன்களில் அவுட்டாக்கிய மார்கோ யான்சென் அடுத்து வந்த நஜ்மெல் சான்டோவை கோல்டன் டக் அவுட்டாக்கினார். அப்போது வந்த கேப்டன் சாகிப் அல் ஹசன் 1 ரன்னில் அவுட்டாக மறுபுறம் தடுமாறிக் கொண்டிருந்த லிட்டன் தாஸும் 22 ரன்களில் ரபாடா வேகத்தில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

போதாக்குறைக்கு அனுபவ வீரர் முஸ்பிக்கர் ரஹீமும் 8 ரன்களில் நடையை கட்டியதால் 58/5 என ஆரம்பத்திலேயே சரிந்த வங்கதேசம் தோல்வியின் பிடியில் சிக்கியது. அப்போது முகமதுல்லா நிதானமாக விளையாடி காப்பாற்ற முயற்சித்த போதிலும் எதிர்ப்புறம் மெஹதி ஹசன் 11, நசும் அஹ்மத் 19, ஹசன் முகமத் 15 ரன்களில் போராடி அவுட்டானார்கள். ஆனாலும் மறுபுறம் தொடர்ந்து தனி ஒருவனாக விளையாடிய முகமதுல்லா 11 பவுண்டரி 4 சிக்ஸருடன் சதமடித்து 111 (111) ரன்கள் விளாசி 250+ ரன்கள் வித்யாசத்தில் எளிதாக வெல்ல வேண்டிய தென் ஆப்பிரிக்காவுக்கு மெகா சவாலை கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதையும் படிங்க: 81/6 என சரிந்த வங்கதேசம்.. தனி ஒருவனாக மாஸ் காட்டிய முகமதுல்லா.. தெ.ஆ வென்றது எப்படி

இறுதியில் வங்கதேசத்தை 46.4 ஓவரில் 233 ரன்களுக்கு சுருட்டிய தென்னாப்பிரிக்கா 149 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்று 4வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜெரால்டு கோட்சி 3, மார்கோ யான்சென், ரபாடா, லிசார்ட் வில்லியம்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதனால் வங்கதேசம் இத்தொடரில் 3வது தோல்வியை பதிவு செய்து பின்னடைவை சந்தித்துள்ளது.

Advertisement