ஒரு காலத்துல பாகிஸ்தானிடமிருந்து காணாம போன அந்த திறமையை.. இப்போ இந்தியாவிடம் இருக்கு.. ரமீஸ் பாராட்டு

Ramiz Raza 3.jpeg
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 5 போட்டிகளில் 5 வெற்றிகளைப் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் அசத்தி வருகிறது. மேலும் தற்சமயத்தில் அனைத்து வீரர்களும் நல்ல ஃபார்மில் இருப்பதன் காரணமாக அபாரமாக செயல்படுவதால் இம்முறை இந்தியா 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் ஆழமாக உருவாகியுள்ளது.

அத்துடன் மிகப்பெரிய சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நியூசிலாந்தை மிகச் சிறப்பாக செயல்பட்டு 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா ஐசிசி தொடரில் 20 வருடங்கள் கழித்து வெற்றி வாகை சூடி அசத்தியது. முன்னதாக தர்மசாலா நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியா காயத்தால் விளையாடாததால் பின்னடைவை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ரமீஸ் ராஜா பாராட்டு:
ஆனாலும் அவருக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற முகமது ஷமி 5 விக்கெட்டுகளை எடுத்து உலகக் கோப்பையில் 2 முறை 5 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய பவுலர் என்ற சாதனை படைத்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார். குறிப்பாக முதல் 4 போட்டிகளில் பெஞ்சில் அமர்ந்திருந்த அவர் திடீரென கிடைத்த வாய்ப்பை பொன்னாக பயன்படுத்தி தம்மை சாம்பியன் பவுலர் என்பதை நிரூபித்தார் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் பெஞ்சில் அமர்ந்து திடீரென ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுப்பது மிகவும் கடினம் என்று தெரிவிக்கும் ரமீஸ் ராஜா அதையும் தாண்டி அசத்திய ஷமி தம்மை மேட்ச் வின்னர் என்பதை காட்டியுள்ளதாக பாராட்டியுள்ளார். அத்துடன் ஒரு காலத்தில் எதிரணிகளை தெறிக்க விடும் அளவுக்கு தரமாக இருந்த பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சு கூட்டணி தற்போது இந்தியாவிடம் இருப்பதாகவும் அவர் வெளிப்படையாக பாராட்டியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “பெஞ்சில் அமர்ந்து அடுத்த போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுப்பது மிகவும் கடினமாகும். உண்மையிலேயே அது மிகப்பெரிய சிறப்பான செயல்பாடாகும். அதனால் தான் இந்தியா வலுவாக இருக்கிறது. அதாவது இந்தியாவின் பெஞ்சில் இருக்கும் வீரர்கள் கூட விளையாடும் 11 பேர் அணியில் இருக்கும் வீரர்களில் ஒருவருக்கு மாற்றாக இடம் பிடித்து அபாரமாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருதை வெல்லும் அளவுக்கு தரமாக இருக்கின்றனர்”

இதையும் படிங்க: பாத்து விளையாடுங்க இந்தியா.. காயம்பட்ட சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கு.. வாசிம் அக்ரம் எச்சரிக்கை

“குறிப்பாக டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசிய ஷமி தன்னுடைய தேர்வை நியாயமாக்கி மேட்ச் வின்னர் என்பதை நிரூபித்துள்ளார். அவர் டெத் அவர்களில் சிறப்பாக செயல்படாமல் போயிருந்தால் நியூசிலாந்து 310 ரன்கள் அடித்திருக்கலாம். அந்த வகையில் கடைசி 10 ஓவர்களில் இந்தியாவின் பவுலிங் உலகத்தரமாக இருந்தது. ஒரு காலத்தில் பாகிஸ்தான் இப்படி பந்து வீசியது. தற்போது இந்தியா பந்து வீச்சில் டாப் தரமான அணியாக உருவெடுத்துள்ளது. அவர்களிடம் நல்ல ஃபார்மில் இருக்கும் சிராஜ், பும்ரா, ஷமி ஆகியோருடன் எதிரணியை சிதைக்கும் கூட்டணி இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement