பாத்து விளையாடுங்க இந்தியா.. காயம்பட்ட சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கு.. வாசிம் அக்ரம் எச்சரிக்கை

Wasim Akram 44
Advertisement

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் இதுவரை களமிறங்கிய 5 போட்டிகளிலும் தொடர்ச்சியான வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் அசத்தி வருகிறது. குறிப்பாக ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தானை தோற்கடித்த இந்தியா உலகக் கோப்பையில் தொடர்ந்து 8வது முறையாக பரம எதிரி பாகிஸ்தானை வீழ்த்தி தங்களுடைய வெற்றி சரித்திரத்தை தக்க வைத்தது.

அதே புத்துணர்ச்சியுடன் 4வது போட்டியிலும் சிறப்பாக செயல்பட்ட இந்தியா 20 வருடங்கள் கழித்து முதல் முறையாக ஐசிசி தொடரில் நியூசிலாந்தை தோற்கடித்து வெற்றி நடை போட்டு வருகிறது. மேலும் அப்போட்டியில் புதிதாக உள்ளே வந்த ஷமி ஆட்டநாயகன் விருது வெல்லும் அளவுக்கு அனைத்து வீரர்களும் சிறப்பான ஃபார்மில் இருக்குப்பதால் 2011 போல இந்தியா இம்முறை சொந்த மண்ணில் கோப்பையை முத்தமிடும் என்று ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

- Advertisement -

காயம்பட்ட சிங்கம் காத்திருக்கு:
அதைத்தொடர்ந்து இந்த வெற்றிப்பயணத்தில் இந்தியா தங்களுடைய 6வது போட்டியில் அக்டோபர் 29ஆம் தேதி லக்னோ நகரில் வலுவான நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. 2019 உலகக் கோப்பையை வென்று சமீப காலங்களாகவே வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் எதிரணிகளை அடித்து நொறுக்கி சிறப்பாக செயல்படக்கூடிய இங்கிலாந்து இத்தொடரில் ஆரம்பம் முதலே தடுமாறி வருகிறது.

சொல்லப்போனால் செமி ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து இதுவரை பங்கேற்ற 4 போட்டியில் 1 வெற்றி மட்டுமே பதிவு செய்துள்ள புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடி வருவது அனைவருக்கும் ஆச்சரியமாகவே அமைந்துள்ளது. இந்நிலையில் செமி ஃபைனலுக்கு தகுதி பெற்று கோப்பையை தக்க வைக்க எஞ்சிய போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள இங்கிலாந்து காயம் பட்ட சிங்கத்தை போல் இந்தியாவுக்கு எதிராக செயல்படலாம் என்று வாசிம் அக்ரம் எச்சரித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா வெற்றி பெறக்கூடிய அணியாக இருக்கிறது. ஆனாலும் இங்கிலாந்து காயம்பட்ட சிங்கமாக இருக்கிறது. குறிப்பாக வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்பதை தெரிந்துள்ள காரணத்தால் அவர்கள் இந்த போட்டியை வித்தியாசமான அணுகுமுறையுடன் அணுகுவதை காணலாம். இருப்பினும் இந்தியா கட்டுப்பாட்டுடன் கூடிய ஆக்ரோஷத்துடன் விளையாடுகிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க: பாண்டியா பொறுமையா 100% ஃபிட்டாகி வரட்டும்.. ரிஸ்க் எடுக்காம அவருக்கே சான்ஸ் கொடுங்க.. வாசிம் அக்ரம் கருத்து

அதே நிகழ்ச்சியில் ஸ்ரீசாந்த் பேசியது பின்வருமாறு. “2003இல் ஆஸ்திரேலிய அணி வெளிப்படுத்திய செயல்பாடுகளை இந்த உலகக் கோப்பையில் இந்தியா வெளிப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். ஒரு முன்னாள் வீரராகவும் இந்தியனாகவும் இந்தியா தொடர்ந்து அனைத்து துறைகளிலும் அசத்தி வெல்ல வேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன்” என்று கூறினார்.

Advertisement