ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து விலகிய நட்சத்திர வீரர்.. ஏன் இந்த முடிவு – விவரம் இதோ

RR
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு துவங்கிய ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. அதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு 2024-ல் 17 வது சீசனில் அடியெடுத்து வைக்க இருக்கிறது. இந்நிலையில் இந்த தொடருக்கு முன்னதாக டிசம்பர் 19-ஆம் தேதி துபாயில் வீரர்களுக்கான ஏலமும் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக சில வீரர்கள் அடுத்த சீசனில் விளையாடப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் ஏற்கனவே சென்னை அணியின் ஆல் ரவுண்டான பென் ஸ்டோக்ஸ் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு இங்கிலாந்து வீரர் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அந்த வகையில் கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 1 கோடிக்கு வாங்கப்பட்ட இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட் அடுத்த சீசனில் விளையாடப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி படுமோசமான தோல்வியை சந்தித்த பிறகு சில வீரர்கள் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டி இந்த முடிவை எடுத்துள்ளனர்.

- Advertisement -

அந்த வகையிலேயே ஜோ ரூட்டும் எதிர்வரும் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகி இங்கிலாந்து கிரிக்கெட்காக முக்கியத்துவம் கொடுத்து உள்ளூர் தொடர்களில் விளையாட இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : அந்த முடிவை மட்டும் எடுத்தா.. மும்பை இந்தியன்ஸ் அணியை மறந்துடுவோம் – ரோஹித் ரசிகர்கள் கொந்தளிப்பு

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடந்த சில ஆண்டுகளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வேளையில் அடுத்த ஆண்டும் அவர்கள் மிகச்சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துவார்கள் என்று தெரிகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த தேவ்தத் படிக்கல் லக்னோ அணிக்கும், லக்னோ அணியில் இருந்த ஆவேஷ் கான் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் டிரேடிங் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement