அந்த முடிவை மட்டும் எடுத்தா.. மும்பை இந்தியன்ஸ் அணியை மறந்துடுவோம் – ரோஹித் ரசிகர்கள் கொந்தளிப்பு

Rohit-Sharma
- Advertisement -

கடந்த சில நாட்களாகவே ஹார்டிக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்புகிறார் என்ற செய்தியே சமூக வலைதளத்தில் அதிகளவு பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களாக கேப்டன் பொறுப்பை ஏற்று செயல்பட்டு வந்த பாண்டியா ஒருமுறை கோப்பையை வென்று கொடுத்ததோடு ஒருமுறை இறுதிப் போட்டி வரையும் குஜராத் அணியை கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் 2024-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏலத்திற்கு முன்பாக குஜராத் அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நேரடியாக அவரை டிரேடிங் மூலம் எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதோடு ரோகித் சர்மாவிற்கு அடுத்து ஹார்டிக் பாண்டியாவே மும்பை அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்படுவார் என்றும் பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஆண்டே ரோஹித் சர்மாவிற்கு பதிலாக ஹார்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்படவும் வாய்ப்பு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அந்த தகவலை கண்ட ரோகித் சர்மாவின் ரசிகர்கள் பலரும் ஒருவேளை ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் நாங்கள் மும்பை இந்தியன்ஸ் அணியை மறந்து விடுவோம் என்று கொந்தளித்துள்ளனர்.

ஏனெனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த பல ஆண்டுகளாக மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் ரோகித் சர்மா இதுவரை ஐந்து முறை அந்த அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

இப்படிப்பட்ட மகத்தான ஒரு கேப்டன் அவராக பதவி விலகுவதற்கு முன்னதாக அணி நிர்வாகம் அவரை கேப்டன் பொறுப்பில் இருட்னது நீக்கிவிட்டு பாண்டியாவை கேப்டனாக நியமித்தால் மும்பை இந்தியன்ஸ் அணியை அடியோடு மறந்து விடுவோம் என்று ரசிகர்கள் தங்களது காட்டமான கருத்துக்களை சமூகவலைதளத்தின் மூலம் பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க : ஒரே டூரில் அறிமுகமாகி முகேஷ் குமார் இந்தியாவுக்கு விளையாட அந்த பாக் லெஜெண்ட் தான் காரணம்.. அஸ்வின்

கடந்த 2015 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுகமாக பாண்டியா இதுவரை நான்கு முறை அந்த அணி கோப்பையை வென்ற போது அணியில் இருந்தவர் என்பதனாலும் குஜராத் அணிக்காக ஒருமுறை கோப்பையை கைப்பற்றி கொடுத்தவர் என்பதற்காகவும் அவரை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அடுத்த கேப்டனாக்க முடிவெடுத்துள்ளது. ஆனால் ரோகித் சர்மா இருக்கும்போதே அவரை பின்னுக்கு தள்ளி ஹார்டிக் பாண்டியாவை கேப்டனாக மாற்றினால் நிச்சயம் நாங்கள் மும்பை இந்தியன்ஸ் அணி மறந்து விடுவோம் என்று ரசிகர்கள் தங்களது காட்டமான கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement