ஒரே டூரில் அறிமுகமாகி முகேஷ் குமார் இந்தியாவுக்கு விளையாட அந்த பாக் லெஜெண்ட் தான் காரணம்.. அஸ்வின்

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்தியா 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற சீனியர்கள் ஓய்வெடுக்கும் இத்தொடரில் சூரியகுமார் தலைமையில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இசான் கிசான் போன்ற இளம் வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடி இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்கள்.

அதே போல அப்போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் மற்ற இந்திய பவுலர்களை விட 6க்கும் குறைவான எக்கனாமியில் பந்து வீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்து அசத்தினார். குறிப்பாக கடைசி ஓவரில் துல்லியமான யார்க்கர் பந்துகளை வீசிய அவர் வெறும் 3 ரன்கள் மட்டுமே கொடுத்து ஆஸ்திரேலியா எக்ஸ்ட்ரா 5 – 10 ரன்கள் எடுப்பதை தடுத்து இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

பாகிஸ்தான் லெஜெண்ட்:
பெங்காலை சேர்ந்த அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் ஒரே மாதத்திற்குள் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டிலும் இந்தியாவுக்காக அறிமுகமானது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது. ஏனெனில் இந்தியாவுக்காக ஒரு வகையான கிரிக்கெட்டில் அறிமுகமாவதே மிகப்பெரிய சவாலாக பார்க்கப்படும் நிலையில் 3 வகையான கிரிக்கெட்டிலும் ஒரே மாதத்தில் அறிமுகமாகும் அளவுக்கு அவரிடம் என்ன திறமை இருக்கிறது என்று ரசிகர்கள் வியந்தனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் ஜாம்பவான் வக்கார் யூனிஸ் பயிற்சியில் வெறும் 2 பந்துகளை வீசியதை பார்த்து சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட பரிந்துரைத்ததாலயே இன்று முகேஷ் குமார் இந்தியாவுக்கு விளையாடுவதாக ரசிகர்கள் அறியாத பின்னணியை ரவிச்சந்திரன் பகிர்ந்துள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“பெங்கால் வாரியத்தின் தலைவராக பொறுப்பேற்றதும் இளம் வீரர்களை கண்டறிவதற்கான ஒரு நிகழ்ச்சியை சௌரவ் கங்குலி நடத்தினார். அதில் முத்தையா முரளிதரன், விவிஎஸ் லக்ஷ்மண், வக்கார் யூனிஸ் ஆகியோரை கங்குலி வர வைத்திருந்தார். அப்போது வக்கார் யூனிஸ் முன்பாக உங்களுக்கு பந்து வீசும் வாய்ப்பு கிடைப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். ஆனால் அந்த சமயத்தில் முகேஷ் குமார் பெயரை அவர்கள் அழைத்தும் அவர் குளியலறையில் இருந்ததால் பந்து வீசும் வாய்ப்பை தவற விட்டார்”

இதையும் படிங்க: எத்தனை கோடி போனாலும் பரவாயில்ல.. அவரை எடுக்க விடமாட்டோம் – ஆஸ்திரேலிய வீரருக்கு குறிவைத்த ஆர்.சி.பி

“அதனால் தம்முடைய பெயர் அழைக்கவில்லை என்று தெரிவித்த முகேஷ் குமார் 30 நிமிடங்கள் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். அப்போது நிகழ்வு முடிந்து வக்கார் யூனிஸ் கிளம்புவதற்கான நேரம் வந்தது. அந்த கடைசி நேரத்தில் சில பந்துகளை வீசுமாறு முகேஷ் குமாரிடம் அவர் சொன்னார். அந்த 2 பந்துகளே முகேஷ் குமாரின் வாழ்க்கையை மாற்றியது. அதனாலேயே தற்போது அவர் இந்தியாவுக்காக விளையாடுகிறார்” என்று கூறினார்.

Advertisement