எத்தனை கோடி போனாலும் பரவாயில்ல.. அவரை எடுக்க விடமாட்டோம் – ஆஸ்திரேலிய வீரருக்கு குறிவைத்த ஆர்.சி.பி

RCB
- Advertisement -

அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் ஏலமானது டிசம்பர் 19-ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதற்கு முன்னதாக நவம்பர் 26-ஆம் தேதியான இன்று அனைத்து ஐபிஎல் அணிகளுக்கும் இடையேயான டிரேடிங் செய்யும் முறை நிறைவடைகிறது. அதோடு இன்று மாலைக்குள் எந்தெந்த அணி எந்தெந்த வீரர்களை டிரேடிங் முறையில் வாங்கியுள்ளது என்பது குறித்த அனைத்து விவரங்களும் வெளியாகும்.

ஏற்கனவே சில வீரர்கள் டிரேடிங் செய்யப்பட்டிருந்த வேளையில் இன்று கடைசி வாய்ப்பாக சில வீரர்கள் டிரேடிங் செய்யப்படலாம் என்று தெரிகிறது. அதோடு அனைத்து அணிகளுமே தங்களது அணியில் இருந்து வெளியேற்றும் வீரர்கள் குறித்த பட்டியலை இன்று வெளியிடும் என்று தெரிகிறது.

- Advertisement -

இந்நிலையில் அடுத்த மாதம் துபாயில் நடைபெறவுள்ள ஐபிஎல் ஏலத்தில் சில குறிப்பிட்ட வீரர்களை எடுக்க ஒவ்வொரு அணியும் தங்களது முடிவுகளை எடுத்து வைத்துள்ளனர். அதிலும் குறிப்பாக வெளிநாட்டு வீரர்களை தேர்வு செய்வதில் ஒவ்வொரு அணியும் சில குறிப்பிட்ட வியூகங்களை வகுத்து தங்களது திட்டங்கள் குறித்த முடிவுகளை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஆஸ்திரேலிய வீரரான ஜாஸ் இங்கிலீஸ்ஸை ஏலத்தில் எடுக்க ஆர்.சி.பி அணி முனைப்பு காட்டும் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

ஏனெனில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த முதலாவது டி20 போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 47 பந்துகளில் சதம் அடித்து அசத்தியிருந்தார். அதிரடி ஆட்டக்காரர் என்பது மட்டுமின்றி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பதாலும் அவர்மீது ஆர்சிபி அணி கூடுதல் கவனத்தை செலுத்துவதாக தெரிகிறது.

இதையும் படிங்க : தோனிக்கு அடுத்து சி.எஸ்.கே அணியின் கேப்டனாக வெளிநாட்டு வீரருக்கு வாய்ப்பு – வெளியான தகவல்

இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற இந்த போட்டியில் 26 பந்துகளில் அரைசதம் கடந்த அவர் 47 பந்துகளில் சதம் அடித்தார். மொத்தமாக 50 பந்துகளை சந்தித்த அவர் 8 சிக்ஸர்கள் மற்றும் 11 பவுண்டரி என 110 ரன்கள் குவித்து பேட்டிங்கில் அமர்க்கள படுத்தினார். ஏற்கனவே ஆஸ்திரேலியா அணி வீரர்களை எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டும் அணியாக பார்க்கப்படும் ஆர்.சி.பி அணி நிச்சயம் இவரையும் ஏலத்தில் எடுத்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement