தோனிக்கு அடுத்து சி.எஸ்.கே அணியின் கேப்டனாக வெளிநாட்டு வீரருக்கு வாய்ப்பு – வெளியான தகவல்

Dhoni
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2023-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ஐந்தாவது முறையாக ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. கடந்த 2022 ஆம் ஆண்டு மோசமான தோல்வியை சந்தித்த சி.எஸ்.கே அணியானது தோனியின் தலைமையில் மீண்டும் கம்பேக் கொடுத்து பெற்ற இந்த பிரமாண்ட வெற்றி ரசிகர்களால் அதிகளவு கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் அடுத்த 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் குறித்த எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. ஏனெனில் சென்னை அணியின் கேப்டன் தோனி தற்போது 42 வயதை எட்டியுள்ளதால் நிச்சயம் இதுவே அவருக்கு கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும். இதன் காரணமாக சிஎஸ்கே அணி ரசிகர்கள் இந்த ஐபிஎல் தொடரை ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

- Advertisement -

அதோடு சென்னை ரசிகர்கள் மத்தியில் விளையாடிவிட்டு தான் ஓய்வு பெறுவேன் என்று தோனி ஏற்கனவே அறிவித்திருந்ததாலும், ரசிகர்களுக்காக இந்த ஆண்டு அவர் விளையாட இருப்பதாக கூறியதினாலும் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டுள்ளது.

இந்நிலையில் இந்த 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் மினி ஏலமானது டிசம்பர் 19-ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கி அவர்களது அணியில் உள்ள இடங்களை நிரப்புவார்கள் என்று தெரிகிறது. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தற்போது அடுத்த கேப்டன் தேடலில் வெளிநாட்டு வீரர் ஒருவரை குறி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்சை சென்னை அணி வாங்க முனைப்பு காட்டும் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் ஆஸ்திரேலிய அணிக்காக அவர் டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஆஷஸ் கோப்பை மற்றும் 50 உலகக் கோப்பை என ஒரே ஆண்டில் பல்வேறு கோப்பைகளை கைப்பற்றியதால் நிச்சயம் அவரை ஏலத்தில் எடுத்து தோனிக்கு அடுத்து சென்னை அணி கேப்டனாக அவரை நியமிக்கும் என்று சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க : அவர் தான் அடுத்த ஜூனியர் ஷமியா வருவாரு.. இளம் இந்திய வீரரை பாராட்டிய அஸ்வின்

இருப்பினும் இது அதிகாரப்பூர்வமற்ற தகவல் என்று தெரிகிறது. இருந்தாலும் அடுத்த கேப்டன் தேடலில் இருக்கும் சென்னை அணி அவரை ஏலத்தில் எடுத்தாலும் எடுக்கலாம். ஆனாலும் இது உறுதி செய்யப்படாத தகவல் என்பதே தற்போது நிலையாக உள்ளது. 2024-ஆம் ஆண்டு தோனி ஓய்வு பெறும்போது நிச்சயம் அடுத்த கேப்டனை தயார் செய்த பிறகு தான் அணியில் இருந்து வெளியேறுவார் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement