அவர் தான் அடுத்த ஜூனியர் ஷமியா வருவாரு.. இளம் இந்திய வீரரை பாராட்டிய அஸ்வின்

Ravichandran Ashwin 5
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடி வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. 2023 உலகக் கோப்பையில் தோல்வியை சந்தித்தாலும் 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராக நடைபெறும் இத்தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு சூரியகுமார் தலைமையில் புதுமுக வீரர்களுக்கு நெறைய வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இத்தொடரின் முதல் போட்டியில் ஜோஸ் இங்லிஷ் 110 ரன்கள் குவித்த உதவியுடன் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 209 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு சூரியகுமார் 80, இஷான் கிசான் 58 ரன்கள் விளாசி வெற்றியை உறுதி செய்தனர். ஆனாலும் திலக் வர்மா, அக்சர் பட்டேல் முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்ததால் கடைசி நேரத்தில் தடுமாறிய இந்தியாவுக்கு கடைசி பந்தில் சிக்ஸருடன் ரிங்கு சிங் 22* ரன்கள் அடித்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்து வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

ஜூனியர் ஷமி:
இந்நிலையில் இப்போட்டியில் சிறப்பாக பந்து வீசிய முகேஷ் குமார் இந்தியாவின் அடுத்த ஜூனியர் ஷமி போல் வருவார் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார். குறிப்பாக முதல் போட்டியில் அனைத்து இந்திய பவுலர்களும் 6க்கும் மேற்பட்ட எக்கனாமியில் ரன்களை வாரி வழங்கிய முகேஷ் குமார் மட்டும் 4 ஓவரில் 29 ரன்கள் மட்டும் எடுத்து அசத்தலாக பந்து வீசினார்.

அதிலும் குறிப்பாக 20வது ஓவரில் வெறும் 3 ரன்கள் மட்டுமே கொடுத்த அவர் ஆஸ்திரேலியா எக்ஸ்ட்ரா 10 ரன்கள் எடுப்பதை தடுத்து வெற்றியில் பங்காற்றினார். பெங்காலை சேர்ந்த அவர் சமீப காலங்களாக உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தியதால் கடந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் 3 வகையான கிரிக்கெட்டிலும் ஒரே மாதத்திற்குள் அறிமுகமானார்.

- Advertisement -

அந்த சூழ்நிலையில் ஷமி போல முகேஷ் குமார் வருவார் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அஸ்வின் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஆரம்பத்தில் முகமது சிராஜ் ஜூனியர் ஷமி போல வருவார் என்று நான் நினைத்தேன். ஆனால் தற்போது முகேஷ் குமார் அப்படி வருவார் என்று கருதுகிறேன். ஷமியை பொதுவாக நான் நடிகர் மோகன்லால் போல லாலா என்று அழைப்பேன்”

இதையும் படிங்க: மீடியாவில் நீங்க அப்படி பேசியிருக்க கூடாது.. 2023 உ.கோ தோல்வியால் ரோஹித் மீது கம்பீர் அதிருப்தி

“முகேஷ் குமாரும் அவரைப் போலவே உயரத்தையும், மணிகட்டு பொசிஷனையும் கொண்டு பேக் ஆஃப் ஸ்பின் பந்துகளை சிறப்பாக வீசுகிறார். மேலும் அவரிடம் நேராக சரியான கோணத்தில் வீசும் திறமையும் இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் விளையாடிய அனைத்து தொடர்களிலும் அவர் சிறப்பாக விளையாடினார். குறிப்பாக பார்படாஸ் நகரில் நடைபெற்ற பயிற்சி போட்டியில் அபாரமான செயல்பட்டார்” என்று கூறினார்.

Advertisement