மீடியாவில் நீங்க அப்படி பேசியிருக்க கூடாது.. 2023 உ.கோ தோல்வியால் ரோஹித் மீது கம்பீர் அதிருப்தி

Gautam Gambhir 8
- Advertisement -

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நிறைவு பெற்ற ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் 6வது முறையாக கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா உலகின் புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. மறுபுறம் அகமதாபாத் நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பேட்டிங்கில் 240 ரன்கள் மட்டுமே பந்து வீச்சிலும் சுமாராகவே செயல்பட்டு தோல்வியை சந்தித்த இந்தியா கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது.

குறிப்பாக ரோகித் சர்மா தலைமையில் அனைத்து வீரர்களும் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் 10 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்ற இந்தியா 2013க்குப்பின் ஐசிசி தொடர்களின் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் நாக் அவுட் போட்டியில் மீண்டும் பழைய சொதப்பலை அரங்கேற்றிய இந்தியா 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் பொன்னான வாய்ப்பை கோட்டை விட்டது.

- Advertisement -

கம்பீர் அதிருப்தி:
முன்னதாக 24 வருடங்களாக இந்திய பேட்டிங் துறையை தனது தோள் மீது சுமந்த சச்சினுக்காக 6வது முயற்சியில் கோப்பையை வென்று காட்டுவோம் என 2011 உலகக் கோப்பையில் தெரிவித்த யுவராஜ் போன்ற வீரர்கள் இறுதியில் அதை செய்தும் காட்டினார்கள். அதே போல 2022 டி20 உலகக் கோப்பையில் தோல்வியை சந்தித்தது போன்ற கடினமான நேரங்களில் பக்கபலமாக இருந்த ராகுல் டிராவிட்டுக்காக இம்முறை கோப்பையை வெல்வோம் என்று ஃபைனலுக்கு முன்பாக கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்திருந்தார்.

இருப்பினும் 2011 போல இந்தியா கோப்பையை வெல்ல தவறியதால் ரோஹித் சர்மாவும் ராகுல் டிராவிட்டும் ஏமாற்றத்தையே சந்தித்தனர். இந்நிலையில் உலகக் கோப்பைக்கு முன்பாக ஒரு குறிப்பிட்ட நபருக்காக கோப்பையை வெல்வோம் என்று சொல்லும் கலாச்சாரம் நிற்க வேண்டுமென கௌதம் கம்பீர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி அவர் சமீபத்தில் பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஒரு குறிப்பிட்ட நபருக்காக உலகக் கோப்பையை வெல்வோம் என்று கிரிக்கெட்டர்கள் சொல்வதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அது சரியான கருத்தல்ல. ஏனெனில் நீங்கள் ஒட்டுமொத்த நாட்டுக்காக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும். ஒருவேளை நீங்கள் அது போன்ற கருத்தை வைத்திருந்தாலும் அதை உங்களுக்குள்ளேயே வைத்திருக்க வேண்டுமே தவிர ஊடகங்களில் சொல்லக்கூடாது”

இதையும் படிங்க: அவரை பாத்து நானும் கத்துக்க ட்ரை பண்றேன்.. சக வீரர் பற்றி ஓப்பனாக பேசிய திலக் வர்மா

“2011இல் ஒரு குறிப்பிட்ட நபருக்காக (சச்சின்) உலகக் கோப்பையை வெல்ல விரும்புவதாக சிலர் சொல்வதை நான் கேட்டேன். ஆனால் அந்த சமயத்திலும் நான் நாட்டுக்காக கோப்பையை வெல்ல வேண்டும் என்றே சொன்னேன். அதே எண்ணத்துடன் பேட்டை கையில் எடுத்த நான் செய்தும் காட்டினேன்” என்று கூறினார். அந்த வகையில் 2003இல் வீரராகவும் 2007இல் கேப்டனாகவும் தோல்வியை சந்தித்த ராகுல் டிராவிட் தற்போது பயிற்சியாளராக கூட உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் விடை பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement