அவரை பாத்து நானும் கத்துக்க ட்ரை பண்றேன்.. சக வீரர் பற்றி ஓப்பனாக பேசிய திலக் வர்மா

Tilak Varma
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் ஃபைனலில் தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 209 இலக்கை துரத்திய இந்தியா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தங்களுடைய அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த சாதனை படைத்தது.

குறிப்பாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் 80, இசான் கிசான் 58 ரன்கள் வெற்றியை உறுதி செய்தார்கள். ஆனாலும் முக்கிய நேரத்தில் திலக் வர்மா அவுட்டான நிலையில் கடைசி ஓவரில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்தியாவுக்கு கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்டது. அப்போது மறுபுறம் கில்லியாக நின்ற ரிங்கு சிங் சிக்ஸர் அடித்து 22* (14) ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

கத்துக்க ட்ரை பண்றேன்:
கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத்துக்கு எதிராக கடைசி ஓவரில் 5 சிக்சர்கள் அடித்து அசாத்தியமான வெற்றியைப் பெற்றுக் கொடுத்த அவர் இந்தியாவுக்காக அறிமுகமாகி இதுவரை விளையாடிய அயர்லாந்து மற்றும் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக விளையாடி வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். அதனால் தோனி போலவே இந்திய அணிக்கு வருங்காலத்தில் அசத்தப்போகும் பினிஷர் கிடைத்துள்ளதாக ரசிகர்கள் அவரை பாராட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் முதல் போட்டியில் தாம் ஃபினிஷிங் செய்ய விரும்பியும் தவற விட்டதாக திலக் வர்மா தெரிவித்துள்ளார். எனவே அடுத்து வரும் போட்டிகளில் எப்படி ஃபினிஷிங் செய்ய வேண்டும் என்பதை ரிங்கு சிங்கை பார்த்து கற்றுக்கொண்டு வருவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “போட்டிகளை வெற்றிகரமாக ஃபினிஷிங் செய்வதை நான் விரும்புகிறேன்”

- Advertisement -

“அதை நான் ரிங்கு சிங்கிடம் இருந்து கற்று வருகிறேன். ஏனெனில் இந்தியாவுக்காக அவர் தொடர்ந்து அதை செய்து வருகிறார். நானும் அதே போலவே ஃபினிஷிங் செய்ய விரும்புகிறேன். அடுத்த போட்டியில் அதை நான் செய்வேன் என்று நம்புகிறேன். பொதுவாக ஒரு போட்டியில் 11 வீரர்களும் பங்காற்றுவது அவசியமாகும். அனைத்து வீரர்களும் தங்களுடைய எண்ணங்களை கேப்டனிடம் பகிரலாம்”

இதையும் படிங்க: முதல் நாளே திருவனந்தபுரத்தில் கொட்டித் தீர்த்த மழை.. 2வது டி20 நடக்குமா? முழுமையான வெதர் ரிப்போர்ட்

“இருப்பினும் அதை வைத்து முடிவை எடுப்பது கேப்டன் கையில் இருக்கிறது. அனைத்து வீரர்களும் தங்களுடைய கருத்துக்களை கேப்டனிடம் தெரிவிக்கலாம்” என்று கூறினார். முன்னதாக கடந்த வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் அறிமுகமான திலக் வர்மாவும் இடது கை பேட்ஸ்மேனாக அதிரடியாக விளையாடியதுடன் அவ்வப்போது பந்து வீசி சுரேஷ் ரெய்னா போல் அசத்துவராக ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement