முதல் நாளே திருவனந்தபுரத்தில் கொட்டித் தீர்த்த மழை.. 2வது டி20 நடக்குமா? முழுமையான வெதர் ரிப்போர்ட்

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடரின் மாபெரும் இறுதிப் போட்டியில் மறக்க முடியாத தோல்வியை பரிசளித்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மீண்டும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. அதில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்ற இந்தியா 1 – 0* (5) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.

விராட் கோலி, கேப்டன் ரோஹித் சர்மா போன்ற முக்கிய வீரர்கள் ஓய்வெடுக்கும் இத்தொடரில் 2024 டி20 உலகக் கோப்பைக்கு தேவையான வீரர்களை கண்டறிவதற்காக புதுமுக வீரர்களுக்கு அதிகப்படியான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சூரியகுமார் யாதவ் தலைமையில் முதல் போட்டியில் விளையாடிய இந்தியாவுக்கு பந்து வீச்சில் ரவி பிஷ்னோய், முகேஷ் குமார் ஆகியோர் சிறப்பாக விளையாடியார்கள்.

- Advertisement -

வெளுத்த மழை:
அதே போல பேட்டிங்கில் இஷான் கிசான் நீண்ட நாட்கள் கழித்து டி20 கிரிக்கெட்டில் அரை சதமடித்த நிலையில் ரிங்கு சிங் தில்லாக கடைசி பந்தில் சிக்சர் அடித்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். இதைத் தொடர்ந்து இத்தொடரின் 2வது போட்டி நவம்பர் 26ஆம் தேதி இரவு 7 மணிக்கு கேரள மாநிலத்தில் இருக்கும் திருவனந்தபுரம் நகரில் உள்ள கிரீன்ஃபீல்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

அதில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க ஆஸ்திரேலியா தயாராகியுள்ளது. மறுபுறம் சொந்த மண்ணில் இருதரப்பு தொடரில் நாங்கள் எப்போதுமே புலி என்பதை காண்பித்து இப்போட்டியிலும் இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இப்போட்டி நடைபெறும் கிரீன்பீல்ட் மைதானத்தில் நவம்பர் 25ஆம் தேதி மாலை நேரத்தில் மழை வெளுத்து வாங்கியது.

- Advertisement -

குறிப்பாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த மழையால் மைதானம் முழுவதும் தண்ணீரால் நிரம்பிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதனால் இப்போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் ரசிகர்களிடம் காணப்படுகிறது. ஆனாலும் நவம்பர் 26ஆம் தேதி திருவனந்தபுரம் நகரில் மழை பெய்வதற்கு 10% மட்டுமே வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

இதையும் படிங்க: முதல் நாளே திருவனந்தபுரத்தில் கொட்டித் தீர்த்த மழை.. 2வது டி20 நடக்குமா? முழுமையான வெதர் ரிப்போர்ட்

குறிப்பாக மதியம் 2 முதல் மாலை 7 மணி வரை முறையே 51%, 47%, 19%, 19%, 15%, 7% என படிப்படியாக மழையின் அளவு குறைந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின் போட்டி நடந்து முடிக்கும் இரவு 11 மணி வரை சராசரியாக 7% மட்டுமே மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கும் என்றும் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவிக்கிறது. அதனால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement