என்னதான் இஷான் கிஷன் நல்லா விளையாடினாலும் இந்த விஷயத்தை மாத்தியே ஆகனும் – பார்த்திவ் படேல் கருத்து

Parthiv-Patel
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று முடிந்த வேளையில் அந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 2 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது.

அதன்படி நடைபெற்று முடிந்த அந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் குவித்தது.

- Advertisement -

பின்னர் 209 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 19.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் குவித்து இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதோடு 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த போட்டியில் இந்திய அணி 22 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய வேளையில் சூரியகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரது சிறப்பான பார்ட்னர்ஷிப் காரணமாக இந்திய அணி வெற்றியை நோக்கி சென்றது என்று கூறலாம். அதிலும் குறிப்பாக இந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷன் 39 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர் என 58 ரன்கள் குவித்து அசத்தினார்.

- Advertisement -

அவரது இந்த ஆட்டம் அனைவரும் மத்தியில் பாராட்டுகளை பெற்று வந்த வேளையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான பார்த்திவ் பட்டேல் இஷான் கிஷனின் ஆட்டம் சிறப்பாக இருந்தாலும் அவர் மாற்றிக்கொள்ள வேண்டிய ஒரு விடயம் பற்றி பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : இஷான் கிஷன் முதல் போட்டியில் நன்றாகத்தான் விளையாடினார். ஆனாலும் அவர் டாட் பால்களை அதிகளவு விளையாடுகிறார். அதனை அவர் குறைத்து கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க : இந்திய கிரிக்கெட்டில் யாருமே அவர கேள்வி கேட்க மாட்டாங்க.. அம்பத்தி ராயுடு அதிரடி கருத்து

ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் நம்மிடம் இருப்பதே 120 பந்துகள் தான். எனவே டாட் பால்களை தவிர்த்து அதில் ஸ்ட்ரைக் ரொட்டேஷன் செய்தால் அதிதியாக விளையாடும் போது இன்னும் அதிகளவு ரன்கள் கிடைக்கும் என்று அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பார்த்திவ் பட்டேல் கூறியது போன்றே இந்த போட்டியின் இரண்டாவது ஓவரில் 6 டாட் பால்களை விளையாடிய இஷான் கிஷன் அந்த ஓவரை மெய்டன் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement