3க்கு 3.. ராஜஸ்தானுக்காக அசத்திய ரியன் பராக்.. ஆர்சிபி’யுடன் இணைந்த மும்பை.. பாண்டியா பரிதாப சாதனை

MI vs RR 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் ஏப்ரல் 1ஆம் தேதி நடைபெற்ற 14வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பைக்கு ரோஹித் சர்மா, நமன் திர் ஆகியோரை முதல் ஓவரிலேயே ட்ரெண்ட் போல்ட் அடுத்தடுத்து கோல்டன் அக்கவுட்டாக்கி தெறிக்க விட்டார்.

அத்துடன் நிற்காத போல்ட் அடுத்ததாக வந்த தேவால்ட் ப்ரேவிஸை கோல்டன் டக் அவுட்டாக்கி மிரட்டினார். அடுத்த ஓவரிலேயே மறுபுறம் போராடிய இசான் கிசானும் 16 ரன்களில் நன்ரே பர்கர் வேகத்தில் அவுட்டானார். அதனால் 21/4 என மோசமான துவக்கத்தை பெற்ற மும்பை 100 ரன்கள் தாண்டுமா என்று அந்த அணி ரசிகர்கள் கவலையடைந்தனர்.

- Advertisement -

ராஜஸ்தான் வெற்றி:
அப்போது திலக் வர்மா நிதானமாக விளையாடிய நிலையில் கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிரடியாக 6 பவுண்டரியுடன் 34 (21) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்த சில ஓவர்களில் திலக் வர்மா 34 (29) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அடுத்ததாக வந்த டிம் டேவிட் மோசமாக விளையாடி 17 (24) ரன்ன்களில் பெவிலியன் திரும்பினார். அதனால் 20 ஓவரில் மும்பை 125/9 ரன்கள் எடுத்த நிலையில் ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட், சஹால் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

அதைத் தொடர்ந்து 126 என்ற சுலபமான இலக்கை துரத்திய ராஜஸ்தானுக்கு ஜெய்ஸ்வால் முதல் ஓவரிலேயே அதிரடியாக விளையாட முயற்சித்து 10 (6) ரன்னில் அவுட்டானார். அப்போது வந்த கேப்டன் சஞ்சு சாம்சனை 12 (10) ரன்களில் போல்ட்டாக்கிய ஆகாஷ் மாதவால் மறுபுறம் தடுமாறிய ஜோஸ் பட்லரையும் 13 (16) ரன்களில் அனுப்பினார். அதைத்தொடர்ந்து மிடில் ஆர்டரில் நிதானமாக விளையாடிய ரியான் பராக்குடன் சேர்ந்த அஸ்வின் தம்முடைய பங்கிற்கு 16 (16) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இருப்பினும் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் அசத்திய ரியன் பராக் 5 பவுண்டரி 3 சிக்சருடன் 54* (38) ரன்கள் குவித்து கொடுத்தார். அதனால் 15.3 ஓவரிலேயே 127/4 ரன்கள் எடுத்த ராஜஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது. அதே காரணத்தால் 3 வெற்றிகளை பெற்ற அந்த அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. மறுபுறம் பேட்டிங்கில் 150 ரன்கள் கூட எடுக்காத மும்பைக்கு அதிகபட்சமாக ஆகாஷ் மாத்வால் 3 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

இதையும் படிங்க: 20/4 என மும்பையை தெறிக்க விட்ட ட்ரெண்ட் போல்ட்.. ஏமாற்றிய ரோஹித் சர்மா மோசமான ஐபிஎல் சாதனை

அதனால் பெங்களூருவுக்கு பின் இந்த சீசனில் சொந்த மைதானத்தில் தோல்வியை சந்தித்த 2வது அணியாக மும்பை பரிதாபத்தை சந்தித்தது. மேலும் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையில் 3 போட்டிகளிலும் தோற்று ஹாட்ரிக் தோல்விகளை பதிவு செய்துள்ள மும்பை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை வலுவாக பிடித்துள்ளது. சொல்லப்போனால் குஜராத்துக்காக 2022இல் முதல் 3 போட்டிகளில் வெற்றி பெற்ற பாண்டியா மும்பையின் கேப்டனாக அப்படியே நேர்மாறாக முதல் 3 போட்டிகளிலும் தோல்வியை பதிவு செய்து பரிதாப சாதனை படைத்துள்ளார்.

Advertisement