20/4 என மும்பையை தெறிக்க விட்ட ட்ரெண்ட் போல்ட்.. ஏமாற்றிய ரோஹித் சர்மா மோசமான ஐபிஎல் சாதனை

MI vs RR
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் ஏப்ரல் 9ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் 14வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் மும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து முதல் வெற்றியை சொந்த மண்ணில் பெறும் முனைப்புடன் களமிறங்கிய மும்பைக்கு முதல் ஓவரின் 5வது பந்தில் ரோகித் சர்மாவை கோல்டன் டக் அவுட்டாக்கிய ட்ரெண்ட் போல்ட் அடுத்ததாக வந்த நமன் திரையும் கோல்டன் சக் அவுட்டாக்கினார்.

அதோடு நிற்காத போல்ட் தம்முடைய அடுத்த ஓவரில் அதற்கடுத்ததாக வந்த தேவால்ட் பிரேவிஸை கோல்டன் டக் அவுட்டாக்கி ஆரம்பத்திலேயே மும்பையை தெறிக்க விட்டார். போதாக்குறைக்கு மறுபுறம் அதிரடியாக விளையாட முயற்சித்த கிசான் கிஷானும் 16 ரன்களில் நன்ரே பர்கர் வேகத்தில் நடையை கட்டியதால் 20/4 என மும்பை ஆரம்பத்திலேயே திண்டாடியது.

- Advertisement -

பரிதாப சாதனை:
அப்போது திலக் வர்மா நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்புறம் வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிரடியாக முயற்சித்து 6 பவுண்டரியுடன் 34 (21) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அப்போது வந்த பியூஸ் சாவ்லா 3 ரன்களுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாத நிலையில் மறுபுறம் போராடிய திலக் வர்மாவும் 32 ரன்களில் சஹால் சுழலில் சிக்கினார்.

இறுதியில் டிம் டேவிட் 17, கோட்ச்சி 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தனர். இருப்பினும் பும்ரா 8*, மாத்வால் 4* ரன்கள் எடுத்ததால் அவுட்டாகும் அமானத்தை தவிர்த்த மும்பை 20 ஓவரில் கடுமையாக போராடி 125/9 ரன்கள் எடுத்தது. அந்தளவுக்கு பந்து வீச்சில் அட்டகாசமாக செயல்பட்ட ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் 3, சஹால் 3, நன்ரே பர்கர் 2 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினர்.

- Advertisement -

முன்னதாக இந்த போட்டியில் ஆரம்பத்திலேயே அடித்து நொறுக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இதையும் சேர்த்து ரோகித் சர்மா தன்னுடைய ஐபிஎல் கேரியரில் 17வது முறையாக டக் அவுட்டானார். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையை ரோகித் சர்மா சமன் செய்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரோஹித் சர்மா : 17*
1. தினேஷ் கார்த்திக் : 17
2. கிளன் மேக்ஸ்வெல் : 15
2. பியூஸ் சாவ்லா : 15
2. மந்திப் சிங் : 15
2. சுனில் நரேன் : 15

இதையும் படிங்க: படிடாரை ட்ராப் பண்ணிட்டு விராட் கோலியுடன் அவரை இறக்குங்க.. ஆர்சிபி வெற்றிக்கு ஸ்ரீகாந்த் ஆலோசனை

ஏற்கனவே இந்த தொடரில் 2 தோல்விகளை பதிவு செய்த மும்பை தற்சமயத்தில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடி வருகிறது. அந்த சூழ்நிலையில் இந்த போட்டியில் தங்களுடைய சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடி மும்பை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மீண்டும் ஆரம்பத்திலேயே பேட்டிங்கில் சொதப்பிய அந்த அணி தற்போது வெற்றி பெறுமா என்பது கேள்விக்குறியாக காணப்படுகிறது.

Advertisement