KKR vs RR : கொல்கத்தாவின் கனவை உடைத்த ஜெய்ஸ்வால் – ராஜஸ்தான் மாஸ் வெற்றி, மும்பைக்கு மீண்டும் நெருக்கடி

Yashasvi Jaiswal RR vs KKR
- Advertisement -

அனல் தெறித்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் மே 11ஆம் இரவு 7.30 மணிக்கு ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 56வது லீக் போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொண்ட ராஜஸ்தான் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதில் ஏற்கனவே புள்ளி பட்டியலில் கீழ் வரிசையில் தவிக்கும் கொல்கத்தா பிளே ஆப் சுற்றுக்கு செல்ல நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய போதிலும் ராஜஸ்தானின் தரமான பந்து வீச்சில் 20 ஓவர்களில் 149/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. ரஹ்மத்துல்லா குர்பாஸ் 18 (12) ஜேசன் ராய் 10 (8) ஆண்ட்ரே ரசல் 10 (10) ரிங்கு சிங் 16 (18) என முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 57 (42) ரன்கள் எடுத்தார்.

ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சகால் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து 150 ரன்களை துரத்திய ராஜஸ்தானுக்கு ஹர்ஷித் ராணா வீசிய முதல் ஓவரிலேயே அடித்து நொறுக்கிய 6, 6, 4, 4, 2, 6 என 26 ரன்களை விளாசிய ஜெய்ஸ்வால் ஐபிஎல் வரலாற்றில் முதல் ஓவரில் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்தார். இருப்பினும் ஜோஸ் பட்லர் 0 (3) ரன்களில் ரன் அவுட்டானாலும் மறுபுறம் தெறிக்க விடும் பேட்டிங்கை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் தொடர்ந்து பவுண்டரிகளை பறக்க விட்டு வெறும் 13 பந்துகளில் 50 ரன்கள் தொட்டு ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக அரை சதமடித்த வீரர் என்ற மற்றும் ஒரு வரலாறு படைத்தார்.

- Advertisement -

வெளியேறிய கொல்கத்தா:
இதற்கு முன் கேஎல் ராகுல் மற்றும் பட் கமின்ஸ் ஆகியோர் தலா 14 பந்துகளில் அடித்ததே முந்தைய சாதனையாகும். அப்படி அதிரடியாக விளையாடிய அவருடன் அடுத்ததாக களமிறங்கி தனது பங்கிற்கு அட்டகாசமாக பேட்டிங் செய்த கேப்டன் சஞ்சு சாம்சன் 2 பவுண்டரி 5 சிக்சரை பறக்க விட்டு 48* (29) ரன்கள் குவித்தார். மறுபுறம் தொடர்ந்து கொஞ்சம் கூட தடுமாறாமல் கொல்கத்தா பவுலர்களை சரமாரியாக அடித்து நொறுக்கி துவம்சம் செய்த ஜெய்ஸ்வால் கடைசி வரை அவுட்டாகாமல் சதமடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டாலும் 12 பவுண்டரி 5 சிக்சருடன் 98* (47) ரன்கள் குவித்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார்.

அதனால் 13.1 ஓவரிலேயே 151/1 ரன்கள் எடுத்த ராஜஸ்தான் 9 விக்கெட் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 12 போட்டிகளில் 6வது வெற்றியை பதிவு செய்தது. குறிப்பாக 6.5 ஓவர்கள் மீதம் வைத்து 150 ரன்களை வெறித்தனமாக துரத்தியதால் +0.633 என்ற கூடுதல் ரன்ரேட்டை பெற்றுள்ள அந்த அணி பெங்களூருவுக்கு எதிரான கடந்த போட்டியில் சூரியகுமாரின் முரட்டுத்தனமான ஆட்டத்தால் 16.3 ஓவரில் வென்று 8வது இடத்திலிருந்து 3வது இடத்துக்கு முன்னேறிய மும்பையை 4வது இடத்திற்கு பின்னுக்கு தள்ளியுள்ளது.

- Advertisement -

அதனால் எஞ்சிய தன்னுடைய 2 போட்டிகளில் வென்றால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமைக்கு ராஜஸ்தான் வந்துள்ளது. ஆனால் 2க்கு 2 வெற்றி தேவைப்படுவதால் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு 45% மட்டுமே வாய்ப்புள்ளது. மறுபுறம் 3வது இடத்திற்கு சரிந்த மும்பைக்கு இன்னும் 3 போட்டிகள் இருப்பதால் அதில் 2 போட்டிகளில் வென்றால் கூட பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற 61% வாய்ப்புகள் உள்ளது. அதனால் 4வது சரிந்து நெருக்கடியை சந்தித்தாலும் இன்னும் மும்பையின் வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கிறது.

இதையும் படிங்க:வீடியோ : யுவராஜ் போல ருத்ரதாண்டவம் ஆடிய ஜெய்ஸ்வால் – பிரிதிவி, ராகுல் ஆகியோரை மிஞ்சி இரட்டை மாஸ் வரலாற்று சாதனை

ஆனால் இந்த போட்டியில் பேட்டிங், பவுலிங் என அனைத்து துறைகளிலும் சொதப்பிய கொல்கத்தா 12 போட்டிகளில் 7வது தோல்வியை பதிவு செய்தது. குறிப்பாக ஜெய்ஸ்வால் அடித்து நொறுக்கியதால் -0.345 என்ற மோசமான ரன் ரேட்டை பெற்றுள்ள கொல்கத்தா தன்னுடைய கடைசி 2 போட்டிகளில் வென்றாலும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு 95% வாய்ப்பில்லை. அந்த வகையில் கொல்கத்தாவின் 3வது கோப்பை கனவை இந்த போட்டியில் உடைத்து தனது அணியின் வாய்ப்பை அதிகரித்த ஜெய்ஸ்வால் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களின் பாராட்டு மழையில் நனைந்து ஆட்டநாயகன் விருதை வென்றார்

Advertisement