CSK vs RR : கடைசி பந்து வரை அதிரடியாக போராடிய தோனி – ஜடேஜா, 3 பேரின் முக்கிய நேர சொதப்பலால் நூலிழையில் பறிபோன வெற்றி

CSK vs RR
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 தொடரில் ஏப்ரல் 12ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருக்கும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 17வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஐபிஎல் வரலாற்றில் குறிப்பிட்ட அணிக்காக 200 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட வீரராக அப்போட்டியில் சென்னைக்கு தலைமை தாங்கி சாதனை படைத்த கேப்டன் தோனி டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதை தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தானுக்கு யசஸ்வி ஜெய்ஸ்வால் ஆரம்பத்திலேயே 10 (8) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தாலும் அடுத்து களமிறங்கிய தேவதூத் படிக்கல் மற்றொரு தொடக்க வீரர் ஜோஸ் பட்லருடன் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 5 பவுண்டரியுடன் 38 (26) ரன்களில் ஜடேஜாவின் சுழலில் சிக்கினார்.

அந்த நிலையில் களமிறங்கிய சஞ்சு சாம்சன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தாலும் அடுத்து வந்த தமிழகத்தின் லெஜெண்ட் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாட பழகிய சேப்பாக்கம் மைதானத்தின் தன்மைகேற்றார் போல் செயல்பட்டு 4வது விக்கெட்டுக்கு 47 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 1 பவுண்டரி 2 சிக்சருடன் 30 (22) ரன்கள் குவித்து தனது வேலையை செய்து ஆட்டமிழந்தார். அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் சிறப்பாக செயல்பட்ட ஜோஸ் பட்லர் 1 பவுண்டரி 3 சிக்சருடன் 52 (36) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

அந்த நிலையில் வந்த துருவ் ஜுரேல் 4, ஜேசன் ஹோல்டர் 0, ஆடம் ஜாம்பா 1 என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கை ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் மறுபுறும் அதிரடி காட்டிய சிம்ரன் ஹெட்மையர் 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் 30* (18) ரன்கள் எடுத்ததால் 20 ஓவர்களில் ராஜஸ்தான் 175/8 ரன்கள் குவித்தது. சென்னை சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா, துஷார் டேஷ்பாண்டே, ஆகாஷ் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 176 ரன்களை துரத்திய சென்னைக்கு ருதுராஜ் கைக்வாட் ஆரம்பத்திலேயே 8 (10) ரன்கள் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

இருப்பினும் அடுத்து வந்த அஜிங்க்ய ரகானே மற்றொரு தொடக்க வீரர் டேவோன் கான்வேயுடன் இணைந்து அதிரடியாக செயல்பட்டு 2வது விக்கெட்டுக்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய போது 2 பவுண்டரி 1 சிக்சருடன் 31 (19) ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் அடுத்த சில ஓவர்களில் அடுத்து வந்த சிவம் துபே 8 (9), மொய்ன் அலி 7 (10), ராயுடு 1 (2) என 3 முக்கிய பேட்ஸ்மேன்கள் ராஜஸ்தானின் தரமான பந்து வீச்சில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தினர்.

- Advertisement -

போதக்குறைக்கு மறுபுறம் போராடிய டேவோன் கான்வேயும் 6 பவுண்டரியுடன் 50 (38) ரன்களில் அவுட்டானதால் பெரிய பின்னடைவை சந்தித்த சென்னைக்கு கடைசி 5 ஓவரில் 63 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஆடம் ஜாம்பா வீசிய 18 வது ஓவரில் 14 ரன்கள் எடுத்த தோனியும் ஜடேஜாவும் ஜேசன் ஹோல்டர் வீசிய 19வது ஓவரில் 19 ரன்கள் எடுத்தனர். அதனால் கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அடுத்தடுத்த ஒயிட் பந்துகளை போட்ட சந்திப் சர்மா முதல் பந்தில் ரன் கொடுக்கவில்லை. இருப்பினும் அதற்கடுத்த 2 பந்துகளில் அடுத்தடுத்த ஃபிளாட்டான சிக்ஸர்களை பறக்க விட்ட தோனி 4வது பந்தில் சிங்கிள் எடுத்தார்.

5வது பந்தில் ஜடேஜா சிங்கிள் எடுக்க கடைசி பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்ட போது சந்திப் சர்மா துல்லியமான யார்கர் பந்தை வீசியதால் தோனியாலும் சிங்கிள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதனால் தோனி 1 பவுண்டரி 3 சிக்ஸருடன் 32* (17) ரன்களும் ரவீந்திர ஜடேஜா 25* (15) ரன்களும் எடுத்த போதிலும் 20 ஓவர்களில் 172/6 ரன்கள் மட்டுமே எடுத்த சென்னை 3 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது.

இதையும் படிங்க:IPL 2023 : விராட் கோலிய பாத்து என்ன பேசுறீங்க, உங்க கருத்தை தூக்கி குப்பைல போடுங்க – முன்னாள் வீரருக்கு சல்மான் பட் பதிலடி

ஆனால் சென்னையை அதன் சொந்த ஊரில் தோற்கடித்த ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சஹால் – அஸ்வின் சுழல் ஜோடி இரட்டை குழல் துப்பாக்கியாக தலா 2 விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது. இந்த போட்டியில் தடுமாற்றமான துவக்கத்தை பெற்ற சென்னைக்கு மிடில் ஆர்டரில் துபே, மொய்ன் அலி, ராயுடு என 3 முக்கிய வீரர்கள் கொஞ்சம் கூட அதிரடி காட்டாமல் 100க்கும் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

Advertisement