அவர் ஒருத்தர மட்டும் வச்சிக்கிட்டு மத்த எல்லாரையும் ஏலத்தில் விடுங்க.. ஆர்.சி.பி அணிக்கு – ஆர்.பி.சிங் யோசனை

RP-Singh
- Advertisement -

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2025 ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் தற்போதே மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு நவம்பர் மாதம் அடுத்த ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நடைபெறவிருக்கும் வேளையில் இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்க வைக்கலாம் என்றும் அதில் ஒரு வீரர் அன் கேப்டு வீரராக கூட இருக்கலாம் என்ற விதிமுறைகளை அறிவித்துவிட்டது.

ஆர்.சி.பி எல்லாரையும் ஏலத்தில் அனுப்பனும் :

அதோடு இந்த மெகா ஏலத்தில் பங்கேற்கும் அணிகள் 120 கோடி வரை செலவு செய்யலாம் என்ற வரைமுறையையும் அறிவித்து விட்டது. அந்த வகையில் தற்போது அடுத்த ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் தங்களது அணியின் தக்க வைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை தயாரித்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இத்தனை ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் ஒருமுறை கூட கோப்பையை கைப்பற்றாத ஆர்.சி.பி அணி என்னென்ன மாற்றங்களை செய்யப்போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரின் மெகா ஏலத்திற்கு முன்னதாக பெங்களூரு அணி எந்தெந்த வீரர்களை தேர்வு செய்ய வேண்டும்? என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஆர்.பி சிங் சில யோசனைகளை வழங்கி உள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் : ஐபிஎல் மெகா ஏலத்தில் பெங்களூரு அணிக்கு சவால் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் விராட் கோலியை மட்டும் தக்கவைத்து விட்டு மற்ற வீரர்கள் அனைவரையும் விடுவித்து விடலாம். பிறகு தேவையான வீரர்களை ஆர்.டி.எம் கார்டு மூலம் குறைவான தொகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

உதாரணமாக ரஜத் பட்டிதார், முகமது சிராஜ் போன்ற வீரர்களை அவர்கள் அணியிலிருந்து விடுவித்து விட்டு ஏலத்தில் எடுத்தால் நிச்சயம் குறைந்த தொகைக்கு எடுக்க முடியும். அதேபோன்று என்னை பொறுத்தவரை பெங்களூரு அணியில் விராட் கோலியை சுற்றி தான் அந்த அணி அமைய வேண்டும். ஏனெனில் இத்தனை ஆண்டு கால ஐபிஎல் வரலாற்றில் அந்த அணியின் மையப்புள்ளியாக விராட் கோலி செயல்பட்டு வருகிறார்.

இதையும் படிங்க : 49 ரன்ஸ்.. டிராவிஸ் ஹேஸ் மேஜிக்.. இங்கிலாந்து வீரரின் ஏமாற்று ராஜதந்திரம் வீண்.. தொடரை வென்ற ஆஸி

அவரைத் தாண்டி ஒரு வீரர் பெரிய சம்பளத்தை வாங்கினால் அதனை என்னால் நினைத்து கூட பார்க்க முடியாது. விராட் கோலியை முதல் வீரராக தக்கவைத்துக் கொண்டு அவரை சுற்றியே அந்த அணி இருக்க வேண்டும் என்று ஆர்.பி சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement