49 ரன்ஸ்.. டிராவிஸ் ஹேஸ் மேஜிக்.. இங்கிலாந்து வீரரின் ஏமாற்று ராஜதந்திரம் வீண்.. தொடரை வென்ற ஆஸி

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. அதன் முதலிரண்டு போட்டிகளில் வென்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. ஆனால் அதற்கடுத்த 2 போட்டிகளில் வென்ற இங்கிலாந்து தக்க பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்தது. அந்த நிலையில் தீர்மானிக்கும் கடைசிப் போட்டி செப்டம்பர் 29ஆம் தேதி பிரிஸ்டோல் நகரில் நடைபெற்றது.

அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அதிரடியாக விளையாட முயற்சித்து 49.2 ஓவரில் 309 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக பென் டக்கெட் அதிரடியாக விளையாடி சதமடித்து 107 (91), கேப்டன் ஹரி ப்ரூக் 72, பிலிப் சால்ட் 45 ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

டிராவிஸ் ஹெட் அசத்தல்:

மறுபுறம் ஒரு கட்டத்தில் 214-3 என வலுவான நிலையிலிருந்து இங்கிலாந்தை 309 ரன்களுக்கு சுருட்டிய ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக பகுதி நேர பவுலர் டிராவிஸ் ஹெட் 6.2 ஓவரில் 28 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்து மேஜிக் நிகழ்த்தினார். அதைத்தொடர்ந்து 310 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு 7.1 ஓவரில் 78 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த டிராவிஸ் ஹெட் 31 ரன்களில் அவுட்டானார்.

அவருடன் சேர்ந்து அதிரடியாக விளையாடிய மேத்தியூ ஷார்ட் 58 (30) ரன்கள் விளாசி அவுட்டானார். அதைத்தொடர்ந்து கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 36, ஜோஸ் இங்லிஸ் 28* ரன்கள் எடுத்து வெற்றிக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் மழை வந்தது. அப்போது 20.4 ஓவரில் 165-2 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியா டிஎல்எஸ் விதிமுறைப்படி இங்கிலாந்தை விட 49 ரன்கள் முன்னிலை பெற்றது.

- Advertisement -

ஏமாற்று தந்திரம் வீண்:

அதனால் ஆஸ்திரேலியா இப்போட்டியில் வெற்றி பெற்றதாக நடுவர்கள் அறிவித்தனர். அதன் காரணமாக 3 – 2 (5) என்ற கணக்கில் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது. முன்னதாக ஒருநாள் கிரிக்கெட்டில் மழை வந்தால் குறைந்தது 20 ஓவர்கள் விளையாடியிருந்தால் தான் டிஎல்எ விதிமுறைப்படி வெற்றியை தீர்மானிக்க முடியும்.

இதையும் படிங்க: 100 ரன்ஸ்.. 4 விக்கெட்ஸ்.. தெ.ஆ அணியை அடித்து நொறுக்கிய அண்ணன் – தம்பி.. அயர்லாந்து சரித்திர வெற்றி

அது போன்ற சூழ்நிலையில் இப்போட்டியில் ஆஸ்திரேலியா 15 ஓவர்கள் விளையாடியதும் மழை வருவது போல் தெரிந்தது. அப்போது ஆஸ்திரேலியா முன்னிலையில் இருந்ததால் எப்படியாவது 20 ஓவர்கள் விளையாட விடக்கூடாது என்று இங்கிலாந்து அணியினர் நினைத்தனர். அதற்காக இங்கிலாந்து வீரர் மேத்தியூ போட்ஸ் 18வது ஓவரின் போது தன்னுடைய ஒரு காலணியை வேண்டுமென்றே கழற்றி வேறு காலணி வாங்கி நேரத்தை வீணடித்தது நடுவர்களை கடுப்பேற்றியது. ஆனால் அப்போது வராத மழை மேற்கொண்டு 3 ஓவர்கள் வீசிய பின்பே வந்து போட்டியை நிறுத்தியது. அதனால் இங்கிலாந்து அணியின் ராஜதந்திரம் வீணானது என்றே சொல்லலாம்.

Advertisement