இந்தியா டி20 உலககோப்பைக்கு சென்றாலும் நாம நெனைக்குற அந்த விஷயம் நடக்காது – ஆர்.பி.சிங் அதிரடி கருத்து

RP-Singh
- Advertisement -

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை வெல்வதற்காக உலகின் அனைத்து அணிகளும் தயாராகியுள்ளன. அதில் கடந்த வருடம் துபாயில் நடந்த டி20 உலகக்கோப்பையில் லீக் சுற்றுடன் விராட் கோலி தலைமையில் வெளியேறிய இந்தியா இம்முறை 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற கேப்டன்ஷிப் அனுபவம் நிறைந்த ரோகித் சர்மா தலைமையில் கடந்த ஒரு வருடங்களாக பங்கேற்ற அத்தனை இருதரப்பு டி20 தொடர்களையும் வென்று உலகின் நம்பர் ஒன் அணியாக முன்னேறியுள்ளது. அதனால் இந்தியா நிச்சயமாக உலகக்கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக இருப்பதாக ரிக்கி பாண்டிங், ஷேன் வாட்சன் போன்ற முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் கணித்தனர்.

Bhuvneswar Kumar INDIA

- Advertisement -

ஆனால் உலக கோப்பை துவங்க இன்னும் 50 நாட்களுக்கு குறைவாக உள்ள நிலையில் அதற்கு முன்னோட்டமாக ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்ற 2022 ஆசிய கோப்பை தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இந்தியா லீக் சுற்றில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றாலும் வழக்கம்போல அழுத்தமான சூப்பர் 4 சுற்றில் வேலையை காட்டி அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து பைனலுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. இத்தனைக்கும் பாகிஸ்தான், இலங்கை போன்ற இதர அணிகளை காட்டிலும் தரமான நட்சத்திர வீரர்களை கொண்ட வலுவான அணியாக கருதப்படும் இந்தியா தவறான அணி தேர்வு, சுமாரான கேப்டன்ஷிப் போன்ற தேவையற்ற குளறுபடியான முடிவுகளால் வெளியேறியது தான் இந்திய ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

கடுமையான விமர்சனங்கள்:
முன்னதாக கடந்த வருட டி20 உலக கோப்பைக்குப்பின் புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்ற ரோகித் – டிராவிட் ஆகியோர் டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு தேவையான தரமான வீரர்களை கண்டறியும் சோதனை முயற்சி என்ற பெயரில் கடந்த ஒரு வருடங்களில் நடந்த அத்தனை இருதரப்பு தொடர்களிலும் செய்யாத மாற்றங்களே கிடையாது. ஆனால் 6 அணிகள் பங்கேற்ற இந்த முக்கியமான ஆசிய கோப்பையிலும் பினிஷெராக தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்துவிட்டு அவருக்கு ஒரு பந்து மட்டுமே எதிர்கொள்ள வாய்ப்பு கொடுத்த அணி நிர்வாகம் இறுதிவரை தங்களது 11 பேர் அணியை தீர்மானமாக முடிவு செய்யவில்லை.

Rohit Sharma vs SL

மறுபுறம் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகள் தங்களது உலகக்கோப்பை அணியை நேரடியாகவே அறிவித்துவிட்டன. ஆனால் இங்கே இன்னும் 11 பேர் அணியை தேர்வு செய்வதில் குழப்பம் நிலவுகிறது. இப்படி அடிப்படையிலேயே குளறுபடிகள் இருப்பதால் டி20 உலகக்கோப்பையை வெல்லும் அணியாகக் கருதப்பட்ட இந்தியா தற்போது அதிலிருந்து பின் தங்கியுள்ளதாக முன்னாள் இந்திய வீரர் ஆர்பி சிங் கவலை தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஆசிய கோப்பையில் வெளிப்படுத்திய செயல்பாடுகளை வைத்து டி20 உலகக்கோப்பையை வெல்லும் அணியாக இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு செல்லப் போவதில்லை”

- Advertisement -

“நீங்கள் உண்மையாகவே கோப்பையை வெல்ல வேண்டும் என்று நினைத்தால் விரைவில் நடைபெறும் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்க தொடரிலாவது முதலில் உங்களது அணியை உறுதியாக தேர்வு செய்து இறுதிக்கட்ட 11 – 12 வீரர்களை முடிவெடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு தொடர்ந்து மாற்றங்களை செய்து கொண்டிருந்தால் குழப்பமும் ஆபத்தும் தான் வந்து சேரும்” என்று கூறினார்.

Suryakumar Yadav

ஆர்பி சிங் அணி:
அதேபோல் தன்னுடைய உலககோப்பை அணியை தேர்வு செய்துள்ள அவர் 30 வயதை கடந்து விட்டார் என்பதற்காக கழற்றி விடப்பட்ட ஷமியை தேர்வு செய்துள்ளார். அத்துடன் கேஎல் ராகுலை தேர்வு செய்துள்ள அவர் விளையாடும் 11 அணியில் இடம் கிடையாது என்று வெளிப்படையாக பேசியுள்ளார். இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “நான் ஷமியை தேர்வு செய்கிறேன். ஏனெனில் ஆஸ்திரேலியாவில் உள்ள வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியன அவருக்கு உதவி புரியும். அது அவருடைய பலமும் கூட. அதே பவுன்ஸ் காரணமாக குல்தீப் யாதவ் எனது அணியில் இடம் பிடிப்பார். கேஎல் ராகுல் அணியில் இருந்தாலும் 11 பேர் அணியில் இருக்க மாட்டார்” என்று கூறினார்.

- Advertisement -

இதையும் படிங்க : சோதனை செய்ய இதுதான் நேரமா? – ரோஹித் செய்த தவறை சுட்டிகாட்டி விளாசிய – திலீப் வெங்சர்க்கார்

ஆர்பி சிங் இந்திய டி20 உலககோப்பை அணி இதோ:
ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் பட்டேல், முகமது சமி, புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷிதீப் சிங், யுஸ்வென்ற சஹால், குல்தீப் யாதவ், கேஎல் ராகுல், தீபக் சஹர்

ரிசர்வ் வீரர்கள்: தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன், ரவிச்சந்திரன் அஷ்வின்

Advertisement