வீடியோ : ஒழுங்கா சச்சினிடம் மன்னிப்பு கேளுங்க, நேரலையில் ஆர்பி சிங் – ஆகாஷ் சோப்ரா ருசிகர வர்ணனை, சச்சினின் பதில் இதோ

Aakash Chopra rp singh
- Advertisement -

ஐபிஎல் தொடர் போல சிஎஸ்ஏ டி20 சேலன்ஞ் என்ற பெயரில் தென் ஆப்பிரிக்கா வாரியம் புதிய டி20 கிரிக்கெட் தொடரை உருவாக்கியுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடும் சென்னை, மும்பை, டெல்லி, லக்னோ, ஹைதராபாத், ராஜஸ்தான் ஆகிய அணிகளின் உரிமையாளர்கள் தான் இத்தொடரில் விளையாடும் 6 அணிகளையும் மொத்தமாக வளைத்து போட்டுள்ளார்கள். அதைத்தொடர்ந்து இந்த தொடரின் முதல் சீசன் கடந்த ஜனவரி 10 முதல் தென்னாப்பிரிக்காவின் முக்கிய நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் ஜனவரி 18ஆம் தேதியன்று நடைபெற்ற ஒரு லீக் போட்டியில் ஜோகனஸ்பேர்க் மற்றும் ப்ரோடீரியா ஆகிய அணிகள் மோதின.

அதில் ஜோகனஸ்பேர்க் அணி வீரர் அல்சாரி ஜோசப் வீசிய ஒரு பந்தை ப்ரோடீரியா பேட்ஸ்மேன் பில் சால்ட் எதிர்கொண்டு ஸ்ட்ரைட் டிரைவ் அடித்தார். அப்போது எதிர்புறம் இருந்த தேனுஸ் டீ பிருயன் சிங்கிள் எடுப்பதற்காக வெளியே வந்த நிலையில் துரதிஷ்டவசமாக அந்த பந்து அல்சாரி ஜோசப் காலில் பட்டு நேராக ஸ்டம்பில் அடித்தது. அப்போது பேட்ஸ்மேன் வெள்ளை கோட்டை விட்டு வெளியேறியிருந்ததால் அடிப்படை விதிமுறைப்படி நடுவர் அவுட் கொடுத்தார். வரலாற்றில் இது போன்ற நிகழ்வுகள் பலமுறை நிகழ்ந்த போது சர்ச்சைகளும் ஏற்பட்டதில்லை.

- Advertisement -

மன்னிப்பு கேளுங்க:
ஆனால் எதிர்ப்புறமிருந்து பவுலர் பந்தை வீசுவதற்கு முன்பாக பேட்ஸ்மேன் வெள்ளை கோட்டை விட்டு வெளியேறினால் மன்கட் முறையில் ரன் அவுட் செய்யும் போது மட்டும் உலக அளவில் சர்ச்சைகள் ஏற்படுவது ஏன்? என்று அந்த தருணத்தை வர்ணனை செய்து கொண்டிருந்த முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பினார். ஏனெனில் அந்த சமயத்திலும் பந்து வேறு எங்கோ செல்லும் என்ற நம்பிக்கையுடன் பேட்ஸ்மேன் வெளியேறிருப்பார் என்று தெரிவித்த அவர் இதை செய்வதற்கு பவுலர் எந்த விதமான பிரத்யேக யுக்திகளையும் பயிற்சிகளையும் பின்பற்ற தேவையில்லை என்றும் கூறினார்.

அத்துடன் வரலாற்றில் நீங்கள் இது போல எப்போதாவது நேராக அடித்து எதிர்ப்புறம் இருந்த பேட்ஸ்மேன் அவுட்டாகி உள்ளாரா? என்று அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்றொரு முன்னாள் இந்திய வீரர் ஆர்பி சிங்கிடம் அவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பல வருடங்களுக்கு முன்பாக ஒரு முறை சச்சின் டெண்டுல்கரை இது போல் அவர் செய்துள்ளேன் என்று ஆர்பி சிங் பதிலளித்தது அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதனால் உடனடியாக சச்சின் டெண்டுல்கரிடம் மன்னிப்பு கேளுங்கள் என்று தெரிவித்த ஆகாஷ் சோப்ரா அவரது சார்பாக நான் மன்னிப்பு கேட்கிறேன் என்று சச்சின் டெண்டுல்கரிடம் ஜாலியாக மன்னிப்பு கேட்டார்.

- Advertisement -

அதற்கு அப்போட்டி நடைபெற்ற நாளன்று நான் சச்சினிடம் ஏற்கனவே நேரடியாக மன்னிப்பு கேட்டு விட்டதாக ஆர்பி சிங் கலகலப்புடன் தெரிவித்தார். சமூக வலைதளங்களில் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த இந்த வீடியோவை பார்த்த ஒரு ரசிகர் ஆர்பி சிங் சச்சின் டெண்டுல்கரை எதிர்ப்புறம் அவுட்டாக்கிய அந்த வீடியோவை பதிவிட்டு அந்தத் தருணத்தை மேலும் கண்முன்னே கொண்டு வந்தார்.

அந்த நிலையில் அந்த வீடியோவை பார்த்து ஆகாஷ் சோப்ரா மீண்டும் ட்விட்டர் பக்கத்தில் மன்னித்து விடுங்கள் பாஜி என்று சச்சின் டெண்டுல்கரிடம் மன்னிப்பு கேட்டார். அதற்கு “தற்போது தமக்கு மிகவும் பிடித்த ஸ்ட்ரைட் ட்ரைவ் ஒரு காலத்தில் மிகவும் பிடிக்காத ஒன்றாக இருந்தது ஆகாஷ் சோப்ரா” என்று சச்சின் டெண்டுல்கர் பதிலளித்துள்ளார். அதே சமயம் அன்றைய நாளில் தம்மை அவுட்டாக்கிய ஆர்பி சிங்கை கலாய்க்கும் வகையில் “பய்யா மட்டும் தான் பேட்டிங் செய்யும் போதும் விக்கெட் எடுக்கும் திறமை கொண்டவர்” என்று கலகலப்பாக பதிலளித்துள்ளார்.

இதையும் படிங்க: நியூஸிலாந்துக்கு எதிராக 12 வருட சாதனையை தகர்த்த இந்தியா – சொந்த மண்ணில் கில்லியாக புதிய வரலாற்று சாதனை

அப்படி சமூக வலைதளங்களில் இந்த 3 முன்னாள் வீரர்களின் கலகலப்பான பதிவுகள் வைரலாகி வருகிறது. முன்னதாக இது போன்ற அவுட்டை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் போது மன்கட் ரன் அவுட்டை மட்டும் எதிர்ப்பது உண்மையாகவே எந்த வகையிலும் சரியில்லை என்றே கூறலாம்.

Advertisement