IND vs WI : இது நாங்க தோக்க வேண்டிய போட்டிதான். ஆனா இறுதியில் நாங்க ஜெயிக்க இதுவே காரணம் – ராவ்மன் பவல் மகிழ்ச்சி

Rovman-Powell-1
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது நேற்று டிரினிடாட் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியை நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 149 ரன்களை குவித்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பாக அதிகபட்சமாக கேப்டன் ராவ்மன் பவல் 58 ரன்களையும், நிக்கோலஸ் பூரான் 41 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியாது வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறப்பாக பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களை மட்டுமே குவித்தது.

- Advertisement -

இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் பெற்ற வெற்றிக்கு பிறகு பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ராவ்மன் பவல் கூறுகையில் : உண்மையிலேயே இந்த போட்டியில் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் இந்த தொடரை வெற்றியுடன் பாசிட்டிவாக ஆரம்பிக்க நினைத்தோம்.

அந்த வகையில் எங்களது அணியின் வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்று தந்துள்ளனர். இந்த போட்டியில் நாங்கள் தோற்க வேண்டிய நிலையில் தான் இருந்தோம். ஆனால் இந்திய அணியில் செட் பேட்டர்கள் இல்லாததால் கடைசி ஓவர் வரை போட்டி செல்லும் என்ற நம்பிக்கையில் இருந்தேன்.

- Advertisement -

இந்திய அணி வந்து வீசியதை பார்த்த பிறகு ஒரு சுழற்பந்து வீச்சாளரை நாங்கள் குறைவாக தேர்வு செய்துள்ளோம் என்று நினைத்தேன். இருந்தாலும் எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்று தந்துள்ளனர். இந்த மைதானத்தில் பேட்டிங் செய்வது சற்று சவாலாகவே இருந்தது. நல்ல துவக்கம் கிடைத்திருந்தால் ரன்கள் இந்த மைதானத்தில் நிறையவே கிடைக்கும்.

இதையும் படிங்க : IND vs WI : டி20 கிரிக்கெட்ல இந்த தப்பு மட்டும் பண்ணா ஜெயிக்குறது ரொம்ப கஷ்டம் – தோல்விக்கு பிறகு பாண்டியா பேட்டி

ஆனால் துவக்க ஓவர்களில் பேட்டிங் செய்வது கடினமாகவே இருந்தது. சுழற்பந்து வீச்சாளர்களை சமாளித்து சிறப்பாக விளையாடக்கூடிய பேட்ஸ்மேன்கள் எங்கள் அணியில் உள்ளனர். அதோடு பேட்டிங் டெப்த் எங்களது அணியில் உள்ளதால் அது எங்களுக்கு சாதகமாக இருந்தது. குறிப்பாக பூரான், ஹெட்மயர், கையில் மேயர்ஸ் போன்ற வீரர்கள் எங்கள் அணியில் இருப்பது நமது வெற்றிக்கு சாதகமாகவும் இருக்கிறது என ரோவ்மன் பவல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement