IND vs WI : டி20 கிரிக்கெட்ல இந்த தப்பு மட்டும் பண்ணா ஜெயிக்குறது ரொம்ப கஷ்டம் – தோல்விக்கு பிறகு பாண்டியா பேட்டி

Hardik-Pandya
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அங்கு நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது நேற்று ட்ரினிடாட் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் குவித்தனர். அதன் பிறகு 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்தியன் அணியானது 20 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் மட்டுமே குவித்தது.

- Advertisement -

இதன் காரணமாக நான்கு ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா கூறுகையில் : நாங்கள் சேஸிங்கின் போது ஒரு கட்டத்தில் சாதகமான நிலையிலேயே இருந்தோம்.

ஆனால் இறுதி கட்டத்தில் சில தவறுகள் நடைபெற்றதே எங்களது அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. இளம் வீரர்களைக் கொண்ட எங்கள் அணி இதுபோன்ற தவறுகளில் இருந்து நிச்சயம் பாடத்தை கற்று ஒன்றாக மேல் எழுவோம். மேலும் இந்த போட்டிக்கு பிறகு இன்னும் நான்கு போட்டிகள் இருப்பதினால் நிச்சயம் எங்களால் இதிலிருந்து நல்ல விடயங்களை கற்றுக் கொண்டு முன்னேற முடியும்.

- Advertisement -

எப்பொழுதுமே சேஸிங்கின் போது விக்கட்டுகளை இழந்தால் அது சேசிங்கை கடினமாக்கும். நாங்கள் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இழந்த போது சேஸிங்கில் தடுமாற்றம் ஏற்பட்டது இதுவே தோல்விக்கு காரணமாகவும் அமைந்தது என்று பாண்டியா பேசினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் :

இதையும் படிங்க : பாபர் அசாம் தான் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன், விராட் கோலி தடுமாற காரணம் அது தான் – சமிந்தா வாஸ் பேட்டி

இந்த போட்டியில் குல்தீப் மற்றும் சாஹல் ஆகியோரை ஒன்றாக இணைத்து விளையாட வைக்க நினைத்தோம். அக்சர் படேல் நல்ல பேட்டிங்கை வெளிப்படுத்துகிறார். முகேஷ் குமார் இந்த தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். திலக் வர்மா அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என அனைவரையும் பாண்டியா பாராட்டி பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement