பாபர் அசாம் தான் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன், விராட் கோலி தடுமாற காரணம் அது தான் – சமிந்தா வாஸ் பேட்டி

Chaminda Vaas.jpeg
- Advertisement -

சர்வதேச அளவில் நவீன கிரிக்கெட்டில் இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திர வீரர் விராட் கோலி மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக போற்றப்படுகிறார். கடந்த 2008 அண்டர்-19 உலகக் கோப்பை கேப்டனாக வென்று சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் குறுகிய காலத்திலேயே நிலையான இடத்தை பிடிக்கும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு ஜாம்பவான் சச்சின் ஓய்வு பெற்ற 2013க்குப்பின் பெரும்பாலான போட்டிகளில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் உலகின் அனைத்து டாப் பவுலர்களையும் மிகச் சிறப்பாக எதிர்கொண்டு 25000க்கும் மேற்பட்ட ரன்களையும் 75 சதங்களையும் அடித்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார்.

ஆனால் அவரை விட தங்கள் நாட்டை சேர்ந்த பாபர் அசாம் தான் உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் பேசுவது சமீப காலங்களில் வாடிக்கையாகி வருகிறது. கடந்த 2015இல் அறிமுகமாகி 2017க்குப்பின் தொடர்ந்து நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய பாபர் அசாம் ஒருநாள் கிரிக்கெட்டில் தற்போது உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக ஜொலித்து வருகிறார். மேலும் 3 வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து 10000க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்து வரும் அவர் நவீன கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் மிகச்சிறந்த வீரராக செயல்பட்டு வெற்றிகளில் பங்காற்றி வருகிறார் என்பதில் சந்தேகமில்லை.

- Advertisement -

நம்பர் ஒன் பேட்ஸ்மேன்:
இருப்பினும் பெரும்பாலும் ஜிம்பாப்வே போன்ற அணிகளுக்கு எதிராக மட்டுமே அசத்தும் அவர் இதுவரை அழுத்தமான நாக் அவுட் போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு வெற்றிகளை பெற்றுக் கொடுத்ததில்லை என்று நிறைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசுவது வழக்கமாகும். அத்துடன் 500 போட்டிகளில் விளையாடிய விராட் கோலியுடன் 253 மட்டுமே விளையாடியுள்ள அவரை இப்போதே ஒப்பிடுவது மிகவும் தவறான அணுகுமுறை என்று சோயப் அக்தர் போன்ற முன்னாள் பாகிஸ்தான் வீரர்களே சமீப காலங்களில் கூறியுள்ளனர்.

இந்நிலையில் பாபர் அசாம் தான் தற்சமயத்தில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருப்பதாக தெரிவிக்கும் முன்னாள் இலங்கை ஜாம்பவான் வீரர் சமிந்தா வாஸ் அனைத்து போட்டிகளிலும் அசத்த வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்ப்பதாலேயே விராட் கோலி தடுமாறுவதாக கூறியுள்ளார். தற்போது நடைபெற்ற வரும் இலங்கை பிரீமியர் லீக் தொடரில் தாம் பயிற்சியாளராக இருக்கும் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காக விளையாடும் பாபர் அசாம் பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இத்தொடரில் பாபர் அசாம் சாதாரண பேட்ஸ்மேனாக விளையாடும் முடிவெடுத்துள்ளதை நாங்கள் மதிக்கிறோம். அதனால் நிரோசன் டிக்வெல்லா எங்களின் கேப்டனாக செயல்படுவார். மேலும் பாபர் அசாமை பற்றி நீங்கள் பேசும் போது தற்சமயத்தில் அவர் தான் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கிறார். குறிப்பாக அவர் மிகச் சிறப்பாக விளையாடி தன்னுடைய அணியின் வெற்றியில் பங்காற்றும் விதம் அபாரமாக இருக்கிறது. எனவே இளம் கிரிக்கெட் வீரர்கள் அவரிடமிருந்து நிறையவற்றை கற்றுக் கொள்ளலாம்”

“அவர் லங்கா பிரீமியர் லீக் தொடரில் விளையாடுவதை பார்க்க நான் ஆவலடைந்துள்ளேன். அதிலும் தொடக்க வீரராக டாப் ஆர்டரில் அவர் சிறப்பாக செயல்படுவது மிகவும் அவசியமாகும். நாங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பாபர் அசாமின் சிறந்த செயல்பாடுகளை வெளிக்கொண்டு வர முயற்சிக்க உள்ளோம். இங்கே பலரும் விராட் கோலி அனைத்து நேரமும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள்”

“அதனால் ஓரிரு போட்டிகளில் அவர் தடுமாறினாலும் அனைவரும் அதை வித்தியாசமாக பார்க்கிறார்கள். ஏனெனில் விராட் கோலி தம்முடைய கேரியரின் ஆரம்பத்திலிருந்தே சிறப்பாக ரன்களை குவித்து வருகிறார். பொதுவாக ஒரு வீரர் ஃபார்மை இழந்தாலும் அவர்களுடைய கிளாஸில் எந்த சந்தேகமும் வேண்டியதில்லை. அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் சிறப்பாக செயல்பட்ட அவர் எப்போதும் இந்திய கிரிக்கெட்டின் வெற்றியில் பங்காற்ற விரும்புகிறார்”

“அதை அவர் தொடர்வார் என்று நான் உறுதியாக சொல்வேன். மேலும் சச்சின் டெண்டுல்கர் தம்முடைய கேரியரின் கடைசி நேரங்களில் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அது எப்போதுமே நடக்காது. ஒருவேளை அதுவே தற்போது விராட் கோலி தடுமாறுவதற்கான காரணமாக இருக்கலாம். அவருடைய ஃபிட்னஸ் லெவல் மற்றும் டெக்னிக் எப்போதுமே சிறப்பாக இருந்து வருகிறது” என்று கூறினார்.

Advertisement