IND vs WI : நாங்க பண்ண இந்த தப்பு தான் தோல்விக்கு காரணம். வேற எதுவும் இல்ல – ராவ்மன் பவல் வருத்தம்

Rovman-Powell-1
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியானது தற்போது தங்களது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகித்த அந்த அணியானது நேற்றைய நான்காவது போட்டியில் தோல்வியை சந்தித்து இந்த தொடரில் இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் இந்திய அணியுடன் சமநிலையில் உள்ளது.

அதன்படி நேற்று அமெரிக்காவில் உள்ள ப்ளோரிடா நகரில் நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெடுகளை இழந்து 178 ரன்களை மட்டுமே குவித்தது. பின்னர் 179 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

- Advertisement -

இந்த சவாலான இலக்கினை எதிர்த்து விளையாடிய இந்திய அணியானது துவக்கத்திலிருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதியில் 17 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இருந்து 179 ரன்கள் குவித்து ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக துவக்க வீரர்கள் சுப்மன் கில் 77 ரன்களையும், ஜெயிஸ்வால் 84 ரன்களையும் குவித்து அசத்தினர்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ராவ்மன் பவல் கூறுகையில் : இந்த மைதானம் பேட்டிங்கிற்கு நன்றாக ஒத்துழைத்தது. நாங்கள் இந்த போட்டியில் 10 முதல் 15 ரன்கள் வரை குறைவாக அடித்து விட்டோம். இந்த போட்டியில் ஹெட்மயர் மற்றும் ஷாய் ஹோப் ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடினர்.

- Advertisement -

எங்களிடம் தரமான பந்துவீச்சு கூட்டணி இருந்தும் எங்களது திட்டங்களை சரியாக செயல்படுத்த முடியவில்லை. அதேபோன்று இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக நாங்கள் இன்னும் சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டியது அவசியம். மிடில் ஓவர்களில் நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை. ஸ்பின்னர்களுக்கு எதிராக இன்னும் நாங்கள் பேட்டிங்கில் முன்னேற்றம் காண வேண்டும்.

இதையும் படிங்க : IND vs WI : அவங்க 2 பேரும் ரொம்ப டேலன்ட்டான பசங்க. அதுல சந்தேகமே இல்ல – ஹார்டிக் பாண்டியா பாராட்டு

சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மிடில் ஓவரில் பேட்ஸ்மேன்கள் ரன்களை குவிக்க முடியாமல் தடுமாறியதே தோல்விக்கு காரணமாக அமைந்தது. தற்போது இந்த தொடரானது இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் உள்ளது. நாளைய இறுதிப்போட்டியில் நிச்சயம் நாங்கள் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுவோம் என ராவ்மன் பவல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement