IND vs WI : அவங்க 2 பேரும் ரொம்ப டேலன்ட்டான பசங்க. அதுல சந்தேகமே இல்ல – ஹார்டிக் பாண்டியா பாராட்டு

- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியானது நேற்று ப்ளோரிடா நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை குவித்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பாக அதிகபட்சமாக ஹெட்மயர் 61 ரன்களையும், சாய் ஹோப் 45 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 179 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 17 ஓவர்களின் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 179 ரன்கள் குவித்து ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

அதோடு இந்த தொடரையும் தற்போது இந்திய அணி இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா கூறுகையில் :

இந்த மைதானத்தில் பெரிய எண்ணிக்கையில் இந்திய ரசிகர்கள் வந்து எங்களுக்கு ஆதரவினை அளித்தனர். அவர்கள் கொடுத்த ஆதரவு எங்களை மிகச் சிறப்பாக செயல்பட வைத்தது. இந்திய அணியில் துவக்க வீரர்களான சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வாலின் திறமை மீது எனக்கு எந்த ஒரு சந்தேகமும் கிடையாது.

- Advertisement -

இந்த போட்டியிலும் பேட்ஸ்மேன்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து விளையாடினர். பேட்ஸ்மேன்கள் இவ்வாறு விளையாடுவது பந்து வீச்சாளர்களுக்கும் பெரிய அளவில் உதவியைத் தரும். அதோடு பந்துவீச்சாளர்கள் எப்போதுமே போட்டியை வெற்றி பெற்று தரக்கூடியவர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

இதையும் படிங்க : IND vs WI : சவாலான மைதானத்தில் ஜோடியாக சீறிப்பாய்ந்த கில் – ஜெய்ஸ்வால், வெ.இ அணியை துவைத்து இந்தியா வென்றது எப்படி?

ஏனெனில் போட்டியின் ஆரம்பத்தில் இரண்டு விக்கெட்டுகளை எடுத்து விட்டால் போட்டி நம்முடைய கைகளுக்கு வரும். இந்த போட்டியில் சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் விளையாடிய விதம் அற்புதமாக இருந்தது என இந்திய அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement