இது ஸ்பெஷலான நம்பர். முகமது ஷமிக்கு தனது ஸ்டைலில் வாழ்த்துக்களை சொன்ன ரோஹித் சர்மா – விவரம் இதோ

Shami
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி நேற்று நடைபெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்டின் 3-வது நாளில் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை மொத்தம் 55 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 200 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். மேலும் இந்த 200 விக்கெட்டுக்களை அவர் குறைந்த பந்துகளில் எடுத்த முதல் இந்திய பவுலர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

அவரது இந்த சாதனைக்காக தற்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இப்படி ஒரு சாதனையை நிகழ்த்திய முகமது ஷமிக்கு இந்திய அணியின் முன்னணி வீரரும், ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனுமான ரோஹித் சர்மா தனது பாராட்டுக்களை சமூக வலைதளத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அதன்படி ரோகித் சர்மா வெளியிட்டுள்ள அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டதாவது : டபுள் ஹன்ட்ரெட் #200 என்பது ஒரு ஸ்பெஷலான நம்பர் என்று முகமது ஷமியைப் பாராட்டி அவர் தனது பதிவை இட்டுள்ளார். மும்பையிலிருந்து அந்த பதிவு வெளியிடப்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக அவர் தற்போது ஒருநாள் தொடருக்கான அணியில் இணைவார் என்று தெரிகிறது.

ரோகித் சர்மா மட்டுமின்றி இந்திய முன்னாள் வீரர்கள் பலரும் முகமது ஷமியின் இந்த சாதனைக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். அந்த வகையில் வி.வி.எஸ் லட்சுமணன் தனது ட்விட்டர் பக்கத்தில் : முதல் நாள் ஆட்டத்தில் ராகுலின் இன்னிங்ஸ் பிரமாதமாக இருந்தது. அதன் பிறகு 3வது நாள் ஆட்டத்தில் ஷமி 5 விக்கெட்டுகளை எடுத்தது மட்டுமின்றி 200 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார் அருமையான ஒரு பந்து வீச்சு என்று புகழ்ந்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : கெய்க்வாட் மற்றும் வெங்கடேஷ் ஐயர் மட்டுமல்ல காட்டடி அடிக்கும் தமிழக வீரருக்கும் இடம் – பி.சி.சி.ஐ பிளான்

அதேபோன்று முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங்கும் தனது பங்கிற்கு ஷமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் செய்த இந்த சாதனையை ஷமி அவரது தந்தைக்காக அர்பணிப்பதாக உருக்கமுடன் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement