கெய்க்வாட் மற்றும் வெங்கடேஷ் ஐயர் மட்டுமல்ல காட்டடி அடிக்கும் தமிழக வீரருக்கும் இடம் – பி.சி.சி.ஐ பிளான்

BCCI
Advertisement

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரானது தற்போது தென் ஆப்பிரிக்கா நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிவடைந்த பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் அங்கு நடைபெற உள்ளது. ஏற்கனவே இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது ஒருநாள் அணியும் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியானது. ஆனால் டெஸ்ட் தொடரானது துவங்கிய பின்னரும் இதுவரை ஒருநாள் தொடருக்கான அணி அறிவிக்கப்படாமல் இருந்து வருகிறது.

IND

பெங்களூருவில் சிகிச்சை பெற்று வரும் ரோகித் சர்மாவின் உடற்தகுதிக்காக காத்திருக்கும் பிசிசிஐ-யானது நாளை அல்லது நாளை மறுதினம் இந்த தென்னாப்பிரிக்க தொடருக்கான ஒருநாள் தொடரை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணியில் ரோகித் சர்மா மீண்டும் திரும்புவார் என்று கூறப்படுகிறது. அதோடு சேர்த்து அஷ்வின் மற்றும் சாஹல் ஆகியோரும் அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று ஏற்கனவே கூறப்பட்டது.

- Advertisement -

மேலும் விஜய் ஹசாரே தொடரில் சிறப்பாக செயல்பட்ட இளம் வீரர்கள் சிலருக்கும் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் மகாராஷ்டிரா அணியின் துவக்க வீரராக விளையாடும் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் மத்தியபிரதேச அணிக்காக விளையாடும் ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் ஆகியோரும் ஒருநாள் தொடருக்கான அணியில் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

sharukh 1

இந்நிலையில் இந்த ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரரான ஷாருக்கானின் பெயரையும் பிசிசிஐ பரிசீலனை செய்து வருவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் அண்மையில் நடைபெற்று முடிந்த சையது முஷ்டாக் அலி தொடர் மற்றும் விஜய் ஹசாரே ஆகிய தொடர்களில் தமிழக அணிக்காக பினிஷர் ரோலில் களமிறங்க ஷாருக்கான் சிறப்பாக செயல்பட்டு தனது அதிரடி வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க : என்னுடைய இந்த 200 விக்கெட் சாதனையை நான் இவர் ஒருவருக்காக மட்டுமே அர்ப்பணிக்கிறேன் – ஷமி உருக்கம்

இதன் காரணமாக அவரது பெயரும் இந்த ஒருநாள் தொடருக்கான அணியில் இடம் பெறவும் வாய்ப்பு உள்ளதாக பிசிசிஐ சார்பில் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழக அணிக்காக அதிரடியில் பட்டையை கிளப்பி வரும் அவர் ஐ.பி.எல் தொடரிலும் அதிக தொகைக்கு ஏலம் போவார் என்று தெரிகிறது.

Advertisement