எவ்ளோ டார்கெட்னாலும் மோதிபாத்துட வேண்டியதுதான். ரிஸ்க் எடுத்த ரோஹித் – டாஸிற்கு பிறகு கூறிய வார்த்தைகள்

Rohith
- Advertisement -

ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இந்த வாரம் முடிவடைய உள்ளதால் தற்போதைய ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இதுவரை 50 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்று 51வது லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. முக்கியமான இந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கின்றன.

mivsrr

- Advertisement -

ஏனெனில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 12 போட்டிகளில் இரு அணிகளும் தலா 5 வெற்றிகளைப் பெற்று 10 புள்ளிகளுடன் உள்ளதால் இரு அணிகளுமே வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. மேலும் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தான் பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பு நீடிக்கும் என்பதன் காரணமாக இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு இரு அணியின் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் இந்த போட்டியில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு வாய்ப்பை தக்கவைக்கும் என்று மும்பை ரசிகர்கள் தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இன்றைய போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா அணியில் இரண்டு மாற்றங்களை செய்து ரிஸ்க் எடுத்துள்ளார் என்று கூறலாம். கடந்த பல போட்டிகளாகவே சிறப்பாக விளையாடி வரும் துவக்க வீரர் டிகாக்கை நீக்கி அவருக்கு பதிலாக இஷான் கிஷன் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

Ishan kishan

மேலும் மிடில் ஆர்டரில் க்ருனால் பாண்டியா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக நியூசிலாந்து ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷம் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். மற்றபடி அணியில் வேறு எந்த மாற்றமும் இல்லை. இருப்பினும் டிகாக்கை நீக்கியது ஒரு ரிஸ்கான முடிவு என்றே கூறலாம். இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் தாங்கள் முதலில் பவுலிங் செய்ய விரும்புவதாக தெரிவித்தார்.

- Advertisement -

Dekock

அதுமட்டுமின்றி இந்த போட்டி குறித்து பேசிய அவர் : நாங்கள் இந்த போட்டியில் முதலில் பந்து வீச ஆசைப்படுகின்றோம். ஏனெனில் இந்த ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதியில் நாங்கள் முதலில் பேட்டிங் செய்து பார்த்து விட்டோம். பவுலிங் செய்து பார்த்து விட்டோம். ஆனால் மைதானத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. எனவே எங்கள் முன்னர் ஒரு டார்கெட் வைக்கப்பட்டால் அதனை நாங்கள் பேட்டிங்கில் எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.

இதையும் படிங்க : ஐ.பி.எல் தொடரிலிருந்து திடீரென வெளியேறிய சாம் கரன். உலகக்கோப்பையிலும் ஆடமாட்டாராம் – காரணம் இதுதான்

இந்த முக்கியமான போட்டியில் நாங்கள் வலுவாக திரும்ப வேண்டியது அவசியம். எனவே வீரர்கள் அனைவரும் தங்களது பொறுப்பை உணர்ந்து இந்த போட்டியில் செயல்பட உள்ளனர். இந்த போட்டிக்கான சரியான திட்டங்களுடன் வந்துள்ளோம். நிச்சயம் அதனை வெளிப்படுத்தி இந்த போட்டியில் வெற்றி பெறுவோம் என ரோஹித் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement