முழுநேர கேப்டனாக முதல் தொடரை வென்ற ரோஹித் சர்மா – பேசியது என்ன ? (முழுவிவரம் இதோ)

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 56 ரன்களும், இஷான் கிஷன் 29 ரன்களும் குவித்தனர். பின்னர் 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது 17.2 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

ind

- Advertisement -

இதன்மூலம் இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது மட்டுமின்றி நியூசிலாந்து அணியை வாஷ் அவுட் செய்தது. இந்த போட்டியில் 3 ஓவர்கள் வீசி 9 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய அக்சர் பட்டேல் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். பின்னர் போட்டி முடிந்து இந்த தொடர் வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் :ஒவ்வொரு போட்டியிலும் துவக்கம் என்பது முக்கியம். அதுவே எப்போதும் என்னுடைய மன நிலையாக இருக்கும்.

இந்த போட்டியில் பந்து நன்றாக பேட்டுக்கு வந்தது. ஒரு பேட்டிங் குழுவாக நாங்கள் சிலவற்றை திட்டமிட்டிருந்தோம். ஆனால் அனைத்தும் நன்றாக நடந்தது என்று கூற முடியாது. இந்தப்போட்டியில் மிடில் ஆர்டரில் முன்னேற்றம் வேண்டும் என்று நினைத்தே விளையாடினோம். இந்த போட்டியில் ராகுல் விளையாட வில்லை என்றாலும் அவரது அட்டகாசமாக இருக்கிறது.

axar

மிடில் ஆர்டரில் சில வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று நினைத்தோம். அதன்படி இன்று மிடில் ஆர்டருக்கான வாய்ப்பு கிடைத்தது. அதேபோன்று இந்த தொடர் முழுவதுமே சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அஷ்வின், அக்சர் பட்டேல் மற்றும் இன்று அணிக்கு திரும்பிய சாஹல் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி உள்ளனர். வெங்கடேஷ் ஐயர் இன்று சில ஓவர்கள் வீசியது சிறப்பாக இருந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : நான் கேக்கவே இல்ல. ஆனா டீம் மேனேஜ்மென்ட் எனக்கு டெஸ்ட் சீரியஸ்ல ரெஸ்ட் குடுத்துட்டாங்க – இளம்வீரர் வருத்தம்

இந்திய அணியில் தற்போது 8 முதல் 9 வரை பேட்டிங் இருக்கிறது. ஹர்ஷல் பட்டேல் ஹரியானா அணிக்காக விளையாடும் பொழுது துவக்க வீரராக விளையாடியுள்ளார். அதுமட்டுமின்றி தீபக் சாஹர் இலங்கை தொடரில் எவ்வாறு விளையாடினார் என்று நாம் பார்த்தோம். அதன் காரணமாக தற்போது பேட்டிங்கில் நல்ல பலம் உள்ளது என்று ரோகித் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement