நான் கேக்கவே இல்ல. ஆனா டீம் மேனேஜ்மென்ட் எனக்கு டெஸ்ட் சீரியஸ்ல ரெஸ்ட் குடுத்துட்டாங்க – இளம்வீரர் வருத்தம்

IND

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற்ற அடுத்த மூன்று நாட்களிலேயே இந்த தொடர் ஆரம்பித்ததால் இரு அணிகளிலுமே சீனியர் வீரர்கள் சிலர் இந்த தொடரில் இருந்து ஓய்வு எடுத்துக் கொண்டனர். ஆனால் மற்ற வீரர்கள் தொடர்ச்சியாக இந்த தொடரிலும் விளையாடி வருகின்றனர். இந்த தொடரின் முதல் 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்த தொடரில் முன்னிலை வகிக்கிறது.

INDvsNZ 1

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3-வது டி20 போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது இந்த போட்டிக்கு முன்னர் பேசிய இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் கூறுகையில் : டி20 உலக கோப்பை தோல்விக்கு பிறகு அணியில் உள்ள அனைவரும் எந்த இடத்தில் முன்னேற்றம் தேவை என்பதை ஆலோசனை செய்தோம். அதன்படி ஒரு குழுவாக நாங்கள் இன்னும் நிறைய யோசிக்க வேண்டியுள்ளது.

- Advertisement -

மிடில் ஓவர்களில் சற்று முன்னேற்றம் காண வேண்டும் என்பது அனைவரின் கருத்தாக இருந்தது. கடைசியாக நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் ஓரளவு சிறப்பாக விளையாடி உள்ளோம். இருப்பினும் நாங்கள் இன்னும் சில குறிப்பிட்ட இடங்களை சரி செய்தாக வேண்டிய நிலை உள்ளது என டீம் மீட்டிங்கிலும் பேசிக்கொண்டோம். இருப்பினும் இந்த தொடரில் இதுவரை நாங்கள் சிறப்பாக விளையாடி உள்ளதாகவே நினைக்கிறோம்

pant

எந்த ஒரு சூழ்நிலையிலும் வெற்றி பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவன் நான் அதனால் எந்த இடத்தில் என்னை அணி களமிறங்க சொன்னாலும் அந்த இடத்தில் நான் களமிறங்கி விளையாடுவேன். அதுமட்டுமின்றி அணிக்கு பினிஷிங் செய்து கொடுப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாடுவதால் நான் பணிச்சுமை இருப்பதாக ஒருபோதும் நிர்வாகத்திடம் குறை கூறியது கிடையாது.

- Advertisement -

இதையும் படிங்க : ரோஹித் இந்த முடிவு எடுத்ததுமே அடுத்த உலகக்கோப்பையை குறிவச்சிட்டாருன்னு தெரியுது – ஜாஹீர் கான் பேட்டி

மேலும் நான் ஓய்வு எடுக்க வேண்டும் என கேட்கவும் இல்லை. ஆனாலும் அணி நிர்வாகம் எனக்கு நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு அளித்துள்ளது. இது எனக்கு சற்று வருத்தமாக இருந்தாலும் இந்த ஓய்வு நேரத்தில் நான் சற்று புத்துணர்ச்சி அடைவது மட்டுமின்றி தென் ஆப்ரிக்க தொடரில் சிறப்பாக விளையாடுவேன் எனவும் ரிஷப் பண்ட் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement