ரோஹித் இந்த முடிவு எடுத்ததுமே அடுத்த உலகக்கோப்பையை குறிவச்சிட்டாருன்னு தெரியுது – ஜாஹீர் கான் பேட்டி

Zaheer
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 12-சுற்றோடு வெளியேறிய பின்னர் விராட் கோலி கேப்டன் டி20 வடிவ கிரிக்கெட்டிலிருந்து தனது கேப்டன் பதவியை துறந்தார். அதனை தொடர்ந்து தற்போது ரோகித் சர்மா முழு நேர கேப்டனாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

INDvsNZ 1

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் ரோகித் சர்மா எடுத்துவரும் முடிவுகள் அடுத்த உலகக் கோப்பை தொடரை அவர் குறிவைத்துள்ளதாக தெரிவதாக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜாஹீர் கான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணி தற்போது அடுத்த உலகக் கோப்பை தொடருக்காக ஆயத்தமாகி வருகிறது என்று நினைக்கிறேன். ஏனெனில் ரோகித் சர்மா எடுக்கும் சில முடிவுகள் எனக்கு அதைத்தான் ஞாபகப்படுத்துகின்றன.

அதன்படி இரண்டாவது போட்டியில் வெங்கடேஷ் ஐயரை 3வது வீரராக களமிறக்கி அவர் ஒரு பரிசோதனையை நிகழ்த்தினார். அதிலிருந்து ரோகித்சர்மா அடுத்த உலகக் கோப்பையை குறி வைத்துள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது. ஏனெனில் எந்த நேரத்திலும் வீரர்களை எந்த ஒரு இடத்திலும் களமிறக்கி பரிசோதனை செய்வது அடுத்த உலக கோப்பை தொடரில் வீரர்களை மாற்றியமைப்பதற்கு சாதகமாக அமையும்.

iyer

அதுமட்டுமின்றி முக்கியமான போட்டிகளில் விக்கெட்டுகள் சரியும் இக்கட்டான நிலையில் இதுபோன்ற மாற்றங்கள் கை கொடுக்கும் என்கிற காரணத்தினால் வீரர்களுக்கு இதுபோன்ற வாய்ப்புகளை ரோகித் வழங்குவதாக தெரிகிறது. என்னை பொறுத்தவரை ராகுல் டிராவிட் மற்றும் ரோஹித் ஆகியோரது ஆளுமை இந்திய அணிக்கு நல்ல எதிர்காலத்தை தரும் என ஜாஹீர் கான் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : மூன்றாவது டி20 : டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங். அணியில் 2 மாற்றங்கள் – ஏமாற்றிய ரோஹித்

அதேபோன்று இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஓஜா கூறுகையில் : இந்திய அணிக்கு மிடில் ஆர்டர் மட்டும் தான் சற்று பிரச்சனை இருக்கிறது. அதற்கு வெகு விரைவாக தீர்வு காண வேண்டும் என்றும் நிலையான வீரர்களை மிடில் ஓவர்களில் விளையாட வைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி தற்போது இந்திய அணியின் டாப் ஆர்டர் மற்றும் பவுலிங் யூனிட் ஆகியவை சிறப்பாக உள்ளதாகவும், ஒரே ஒரு பிரச்சினையாக மிடில் ஆர்டர் மட்டுமே இருப்பதாகவும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement