மூன்றாவது டி20 : டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங். அணியில் 2 மாற்றங்கள் – ஏமாற்றிய ரோஹித்

INDvsNZ

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 2 க்கு 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3-வது டி20 போட்டி தற்போது கொல்கத்தா மைதானத்தில் துவங்கியுள்ளது. சற்று முன் போடப்பட்ட டாசிற்கு பிறகு டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

INDvsNZ 1

இதன் காரணமாக தற்போது இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது. இந்நிலையில் இந்திய அணியில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பேசிய ரோஹித் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். அதன்படி துவக்க வீரர் ராகுல் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக இஷான் கிஷன் மற்றும் சாஹல் ஆகியோர் அணியில் விளையாடுவதாக அறிவித்தார்.

- Advertisement -

ஏற்கனவே இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றதால் இன்றைய போட்டியில் தொடக்க வீரராக சிஎஸ்கே அணியை சேர்ந்த ருதுராஜ் கெய்க்வாட்-க்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பெரிதளவு பேசப்பட்டு வந்த இந்த இடத்தில் மீண்டும் இஷான் கிஷனை இறக்கி ரோஹித் சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளார் எனலாம்.

Gaikwad 3

ஏனெனில் தொடர்ந்து சிஎஸ்கே அணிக்காக துவக்க வீரராக மட்டுமே விளையாடி வரும் கெய்க்வாட் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்பதன் காரணமாக அவரை விளையாட வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்றைய போட்டியிலும் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : கொல்கத்தா மைதானம் அவருக்கு நல்லா சூட் ஆகும். அவரை இன்னைக்கு விளையாட வைங்க – கம்பீர் கருத்து

இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

1) ரோஹித் சர்மா, 2) இஷான் கிஷன், 3) சூரியகுமார் யாதவ், 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) ரிஷப் பண்ட், 6) வெங்கடேஷ் ஐயர், 7) அக்சர் படேல், 8) யுஸ்வேந்திர சாஹல், 9) தீபக் சாகர், 10) ஹர்ஷல் படேல், 11) புவனேஷ்வர் குமார்.

Advertisement