கொல்கத்தா மைதானம் அவருக்கு நல்லா சூட் ஆகும். அவரை இன்னைக்கு விளையாட வைங்க – கம்பீர் கருத்து

Gambhir
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று ஏற்கனவே தொடரை கைப்பற்றி முன்னிலையில் இருக்கும் வேளையில் இன்று மூன்றாவது டி20 போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஏற்கனவே இந்த தொடரை இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டதால் இன்றைய மூன்றாவது போட்டியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Harshal-2

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியில் இன்று செய்ய வேண்டிய முக்கிய மாற்றம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : பந்து வீச்சு வகையில் இருந்து பார்க்கும்போது இந்தப் போட்டியில் புவனேஷ்வர் குமாருக்கு ஓய்வெடுக்கலாம்.

அவருக்கு பதிலாக இளம் வீரரான ஆவேஷ் கானுக்கு வாய்ப்பு கொடுக்கலாம். ஏனெனில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் வேகப்பந்துவீச்சுக்கு நன்றாக ஒத்துழைக்கும். ஏனெனில் இந்த மைதானத்தில் நல்ல வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவை இருக்கும். எனவே முழுவதும் வேகத்தை மட்டுமே பயன்படுத்தி பந்துவீசும் வேகப்பந்து வீச்சாளராக ஆவேஷ் கான் இந்த போட்டியில் விளையாடலாம்.

Avesh

இந்த போட்டியில் ஆவேஷ் கானை விளையாட வைக்கும் பட்சத்தில் அவருக்கு நல்ல நம்பிக்கை பிறக்கும் என்றும் கம்பீர் கூறியுள்ளார். மேலும் அவரிடம் நல்ல வேகம் இருக்கிறது என்றும் அவர் இந்த போட்டியில் அதனை வெளிப்படுத்தி தனது திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் கம்பீர் கூறியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : முதல் இரு போட்டிகளை போன்று 3 ஆவது போட்டியிலும் ஒரு வீரர் அறிமுகம் – காரணம் டிராவிட் கோச்

இதுமட்டுமின்றி ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுவிட்டோம் என்று நினைக்காமல் நியூசிலாந்து அணியை மூன்றாவது போட்டியிலும் வீழ்த்தி அவர்களை ஒயிட்வாஷ் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். நடைபெற்று முடிந்த 14வது ஐபிஎல் தொடரில் 24 வயதான ஆவேஷ் கான் 16 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பவுலர்களில் இரண்டாவது இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement