முதல் இரு போட்டிகளை போன்று 3 ஆவது போட்டியிலும் ஒரு வீரர் அறிமுகம் – காரணம் டிராவிட் கோச்

IND
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் மூன்றாவது டி20 போட்டி இன்று கொல்கத்தா மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

INDvsNZ 1

- Advertisement -

இந்நிலையில் இன்றைய போட்டிக்கான இந்திய அணி இளம் வீரர்களை வைத்து அவர்களின் திறனை பரிசோதிக்கும் என்று தெரிகிறது. கடைசி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி தொடரை முழுவதுமாக கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படும் அதே வேளையில் பெஞ்சில் அமர்ந்திருக்கும் வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தவகையில் இந்த போட்டியில் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஆவேஷ் கான் அறிமுகமாக அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. ஏனெனில் டிராவிட் பயிற்சியாளராக இருக்கும் போது இளம் வீரர்களுக்கு அணியில் இடம் கிடைத்தால் கட்டாயம் விளையாட ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்பது உறுதி. அந்த வகையில் ஏற்கனவே இலங்கை தொடரில் பல இளம் வீரர்களை அறிமுகப்போட்டியில் போட்டியில் வைத்தார்.

இந்த தொடரின் முதலாவது போட்டியில் வெங்கடேஷ் ஐயரையும், 2வது போட்டியில் ஹர்ஷல் படேலையும், அறிமுகப் போட்டியில் விளையாட வைத்தார். அந்த வகையில் இன்றைய மூன்றாவது போட்டியிழும் ஆவேஷ் கான் அறிமுக வீரராக களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : ஹார்டிக் பாண்டியாவை அந்த விஷயத்துல யாராலும் ஒன்னும் பண்ண முடியாது – கம்பீர் சப்போர்ட்

மேலும் சீனியர் வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அவர்களுக்கு ஒரு போட்டியில் ஓய்வு அளித்து இளம் வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் வாய்ப்பு வழங்கப்படும் என்பதன் காரணமாகவும் இன்றைய போட்டியில் ஆவேஷ் கான் அறிமுகமாக நல்ல வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement