ஹார்டிக் பாண்டியாவை அந்த விஷயத்துல யாராலும் ஒன்னும் பண்ண முடியாது – கம்பீர் சப்போர்ட்

Gambhir
- Advertisement -

இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டரான ஹார்திக் பாண்டியா தொடர்ந்து காயத்தில் சிக்கி வருவதாலும், சமீபகாலமாக அவர் பந்துவீசாமல் இருப்பதனாலும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பாண்டியா அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். ஏற்கனவே உலக கோப்பை தொடரில் அவர் தேர்வான போது அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா ஹார்டிக் பண்டியா நிச்சயம் உலகக்கோப்பை தொடரில் பந்து வீசுவார் என்று உறுதி கூறியே அணியில் இணைத்திருந்தார். ஆனால் ஹார்டிக் பண்டியா உலக கோப்பை தொடரில் பெரிதாக பந்து வீசவில்லை. வெறும் 4 ஓவர்களை வீசி 40 ரன்களை வாரி கொடுத்தார்.

pandya 3

- Advertisement -

இந்நிலையில் இனியும் அவரை நம்பி இருந்தால் வேலைக்காகாது என்று நினைத்த இந்திய அணியானது ஹார்டிக் பாண்டியாவை வெளியேற்றி அந்த இடத்திற்கு தற்போது வெங்கடேஷ் ஐயரை நியூசிலாந்து தொடரில் விளையாட வைத்து வருகிறது. ஏற்கனவே பாண்டியா காயத்தால் அவதிப்பட்டு வருவதால் அவரால் முன்பு போன்று அதிரடியாக விளையாட முடியவில்லை என்று கூறி ரசிகர்கள் இனி இந்திய அணிக்கு பாண்டியா திரும்புவது கடினம் என்று கூறிவருகின்றனர்.

இந்நிலையில் தற்போது ஹார்திக் பாண்டியாவை ஆதரித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியின் 6-ஆம் இடத்திற்கான வீரர் ஒரே நாளில் வந்து விடமாட்டார். அந்தவகையில் பாண்டியாவின் இடம் மிகவும் முக்கியமான ஒன்று.

pandya

ஏனெனில் பின்வரிசையில் பினிஷிங் ரோலில் இறங்கும் ஆல்ரவுண்டர் என்பது எளிதில் கண்டுபிடித்து விட முடியாத ஒரு இடம். நீங்கள் தற்போது பாண்டியாவை குறைத்து மதிப்பிடுகிறீர்கள். ஆனால் அவரை இந்திய அணியில் இருந்து எளிதில் வெளியேற்றிவிட முடியாது. மேலும் பாண்டியாவின் கட்டம் முடிந்துவிட்டது என்றும் சில விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. ஆனால் நிச்சயம் பாண்டியா பெரிய அளவில் கம்பேக் கொடுப்பார்.

- Advertisement -

இதையும் படிங்க : சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற பெயர் இவரால் தான் கிடைத்தது – பாராட்டு விழாவில் பேசிய ஸ்ரீநிவாசன்

காயத்தால் அவதிபட்டாலும் இன்னும் தன் உடம்பை ஃபிட்டாக வைத்துள்ளார். அது மட்டுமின்றி அவருக்கு இன்னும் வயதுள்ளது. தொடர்ந்து பவுலிங் பயிற்சி செய்து வரும் அவர் நிச்சயம் தனது பேட்டிங்கிலும் பார்முக்கு வந்து அணியில் வலுவாக திரும்புவார். அவரது இடத்திலிருந்து நிச்சயம் அவரை யாராலும் வெளியேற்ற முடியாது. இந்திய அணிக்கு விரைவில் பாண்டியா கம்பேக் கொடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று கம்பீர் ஆதரவு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement