இந்திய அணியின் கேப்டனாக எனது முதல் வேலை இதுதான் – சபதம் பூண்ட ரோஹித் சர்மா

Rohith
- Advertisement -

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி மற்றும் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியை என முக்கியமான ஐ.சி.சி தொடர்களின் குரூப் சுற்றுப் போட்டிகளின் போது சிறப்பாக ஆடினாலும் செமி பைனல் மற்றும் பைனல் போன்ற முக்கிய போட்டிளில் துவக்கத்திலேயே விக்கெட்டுகளை விட்டு மிடில் ஆர்டரில் சொதப்பியதன் காரணமாக இரண்டு முக்கிய கோப்பைகளை தவறவிட்டது. தற்போது சமீபத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பையில் கூட மோசமான ஆட்டம் காரணமாக வெளியேறியது.

IND

- Advertisement -

இதன் காரணமாக டி20 கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியிருந்தார். அதனை தொடர்ந்து தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவரது கேப்டன் பதவி பறிக்கப்பட்டு புதிய கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டிற்கு ஒரே கேப்டன் இருக்க வேண்டும் என்கிற காரணத்தினால் தற்போது ரோகித் சர்மாவிற்கு புதிய கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் கேப்டனாக செய்யப்போகும் முதல் பணி குறித்து தற்போது ரோகித் சர்மா தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள இந்தவேளையில் முதலாவதாக செய்ய வேண்டிய ஒரு பணி உள்ளது. அதன்படி முக்கிய போட்டிகளில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் நாங்கள் தோல்வியை சந்தித்து வருகிறோம். எனவே இனிவரும் காலத்தில் இந்திய அணி துவக்கத்தில் 10 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் விழுந்தால் கூட பின்னர் வரும் 3, 4, 5, 6 ஆகிய வீரர்கள் பேட்டிங் செய்து அணியை நல்ல ரன் குவிப்பிற்கு கொண்டு செல்லும் அளவிற்கு அணியை தயார் செய்யப் போகிறேன்.

IND

மேலும் 10 ரன்னுக்கு 2 அல்லது 3 விக்கெட்டுகள் விழுந்தால் 180, 190 ரன்களை கூட அடிக்க முடியாமல் போகிறது. ஆனால் இந்த நிலைமையை மாற்றி மிடில் ஆர்டரிலும் இந்திய அணியை சிறப்பான அணியாக மாற்றி ஆட்டத்தின் போக்கை நிலைப்படுத்தி பெரிய ரன் குவிப்புக்கு செல்லும் அளவிற்கு வீரர்களை தயார் செய்ய வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க : வீடியோ : ஆஷஸ் டெஸ்ட் – தனது ஆஸ்திரேலிய தோழிக்கு ப்ரொபோஸ் இங்கிலாந்து ரசிகர் – மலர்ந்த காதல்

இதுவே எனது முதல் பணியாக இருக்கும் என ரோகித் சர்மா கூறியுள்ளார். மிடில் ஆர்டரில் ஏற்படும் சறுக்கலே முக்கிய போட்டிகளில் தோற்க காரணமாக அமைகிறது. நிச்சயம் இனிவரும் போட்டிகளில் மிடில் ஆர்டரில் சிறந்த பார்ட்னர்ஷிப் அமையுமாறு அணியின் காம்பினேஷனை பலப்படுத்த விரும்புவதாகவும் ரோஹித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement