ஆஷஸ் டெஸ்ட் – தனது ஆஸ்திரேலிய தோழிக்கு ப்ரொபோஸ் இங்கிலாந்து ரசிகர் – மலர்ந்த காதல்

love
- Advertisement -

ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது ஆஷஸ் தொடரில் கலந்து கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிரிஸ்பேனில் துவங்கியது. இன்று மூன்றாவது நாளாக இந்த போட்டி நடைபெற்று முடிந்த வேளையில் ஆஸ்திரேலிய அணியின் கை சற்றே இங்கிலாந்து அணியை விட ஓங்கி இருக்கிறது என்று கூறலாம்.

மூன்றாம் நாள் ஆட்டத்தின்போது மைதானத்தில் சுவாரசியமான ஒரு காதல் சம்பவம் மீண்டும் அரங்கேறியுள்ளது. கிரிக்கெட் மைதானத்தில் இதுபோன்று ப்ரொபோசல் அண்மைக்காலமாகவே அதிகமாகி வருகிறது. அந்த வகையில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ராப் என்கிற ரசிகர் தனது ஆஸ்திரேலிய தோழியான நாட் என்பவரிடம் மைதானத்தின் மத்தியில் அனைவரது முன்னிலையிலும் சர்ப்ரைசாக தனது காதலை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

“நான்கு ஆண்டுகளாக உன்னை காதலிக்கிறேன். என்னை திருமணம் செய்து கொள்வாயா?” என்று மோதிரத்தை நீட்டியபடி தனது காதலை இங்கிலாந்து ரசிகர் வெளிப்படுத்தினார். இதனை சற்றும் எதிர்பாராத அவரது தோழி நாட் சிரித்தபடி காதலுக்கு ஓகே சொல்லியது மட்டுமின்றி அவரை கட்டியணைத்து முத்தத்தை பரிமாறிக் கொண்டார்.

இந்த சம்பவத்தை கண்ட வீரர்கள் மற்றும் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் என அனைவரும் அந்த காதல் ஜோடிக்கு கைத்தட்டி உற்சாகம் கொடுத்தனர். இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது. கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இது போன்ற ப்ரொபோசல்கள் எப்போதுமே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement