தோனி மாதிரி யாரும் இந்த ஒரு விஷயத்தை சரியா பண்றது இல்ல – கேப்டன் ரோஹித் சர்மா கவலை

Rohith
- Advertisement -

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா பங்குபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ரோகித் சர்மா தலைமையில் விராட் கோலி, ரிஷப் பண்ட் போன்ற நட்சத்திர வீரர்கள் அடங்கிய இந்தியாவை கிரண் பொல்லார்ட் தலைமையிலான ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப் போன்ற அதிரடி வீரர்கள் நிறைந்த வெஸ்ட் இண்டீஸ் அணி அதன் சொந்த மண்ணில் சந்திக்கிறது.

Pollard

- Advertisement -

இந்த தொடருக்கான இந்திய அணிக்கு இந்தியாவின் முழு நேர வெள்ளை பந்து கேப்டனாக நியமிக்கப்பட்ட பின் முதல் முறையாக ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட உள்ளார். சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடரின் போது காயமடைந்த அவர் தற்போது அதிலிருந்து முழுமையாக மீண்டு அணிக்கு திரும்பி உள்ளது இந்தியாவிற்கு பலத்தை சேர்க்கிறது.

ஓப்பனிங் யார்:
இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டிக்கான இந்திய அணியில் துணை கேப்டன் மற்றும் தொடக்க வீரர் ராகுல் ஓய்வு எடுக்க உள்ளார். எனவே அவருக்கு பதில் ஷிகர் தவான் அல்லது இளம் வீரர் ருதுராஜ் கைக்வாட் ஆகியோரில் யாரேனும் ஒருவர் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன் இவர்கள் கரோனா ஏற்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார்கள்.

Rohith

இதனால் ஓப்பனிங் இடத்தில் களமிறங்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் அதுபற்றி நேற்று செய்தியாளர்களை சந்தித்த ரோகித் சர்மா கூறியது பின்வருமாறு. “என்னையும் ஷிகர் தவானையும் பெஞ்ச்சில் அமர வைத்துவிட்டு இஷான் கிஷான் – ருதுராஜ் கைக்வாட் ஆகியோரை ஓபனிங் இடத்தில் விளையாட வைக்க நீங்கள் விரும்புகிறீர்களா? அதற்கு இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும். தற்போதைய நிலைமையில் என்னுடன் இஷான் கிஷான் களமிறங்கும் ஒரு வழி தான் உள்ளது” என தெளிவு படுத்தினார்.

- Advertisement -

பினிஷெர் இல்லை:
அதேபோல கடைசி நேரத்தில் களமிறங்கி தேவையான ரன்களை அதிரடியாக குவித்து போட்டியை இந்தியாவிற்கு சாதகமாக பினிஷிங் செய்ய ஒரு நல்ல பினிஷெர் இல்லாமல் சமீப காலங்களாக இந்தியா தடுமாறுவதாக ரோகித் சர்மா கவலை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியது பின்வருமாறு. “ஒருநாள் கிரிக்கெட்டில் பினிஷெர்களின் வேலை மிகவும் முக்கியமானதாகும். ஆனால் எம்எஸ் தோனியின் ஓய்வுக்கு பின் அந்த இடத்தில் இதுவரை யாரும் சரியாக அமையவில்லை. ஹர்டிக் பாண்டியாவை முயற்சித்தோம், ரவீந்திர ஜடேஜா கூட அந்த இடத்தில் விளையாடினார். ஆனாலும் அந்த இடத்திற்கு விளையாட நிறைய வீரர்கள் தேவைப்படுகிறார்கள்.

Ms Dhoni Bhuvneshwar-Kumar

இந்த தொடரில் அந்த இடத்தில் வாய்ப்பு கிடைக்கும் வீரர்கள் அதை சரியாக பயன்படுத்தி இந்திய அணியில் ஒரு இடத்தை பிடிப்பார்கள் என நம்புகிறேன். எப்போதுமே பினிஷெர்கள் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் ரன்கள் குவிக்க வேண்டிய கட்டாயமான நேரத்தில் களமிறங்குவார்கள். அவர்களின் பேட்டிங் போட்டியை மாற்றும் வல்லமை படைத்ததாகும்” என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

முன்னாள் நட்சத்திர வீரர் மற்றும் கேப்டன் எம் எஸ் தோனி பலமுறை சரிந்த இந்திய பேட்டிங்கை தனி ஒருவனாக மிடில் ஆர்டரில் களமிறங்கி தாங்கிப்பிடித்து பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்தியா தோற்க இருந்த பல போட்டிகளில் கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக ரன்களை குவித்து இந்தியாவை வெற்றி பெறச் செய்ததால் “பினிசெர்” என ரசிகர்களால் அழைக்கப்பட்டார். ஆனால் அவர் ஓய்வு பெற்ற 2019க்கு பின் அந்த இடத்தில் விளையாட இதுவரை தகுதியானவர் கிடைக்கவில்லை என ரோகித் சர்மா வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : அண்டர் 19 உலகக்கோப்பையில் சாதித்த இளம் வீரர் – இந்தியாவுக்கு அடுத்த கபில் தேவ் கிடைத்துவிட்டாரா?

அவருக்கு அடுத்தபடியாக ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் போன்ற வீரர்களை இந்தியா சோதனை செய்த போதிலும் அவர்களால் அவரளவுக்கு பினிஷிங் செய்து இந்தியாவிற்கு வெற்றிகளை பெற்றுக்கொடுக்க முடியவில்லை. எனவே முக்கியமான 2023 உலக கோப்பைக்கு முன்பாக பினிஷிங் இடத்தில் புதிய வீரர்களை வளர்க்க உள்ளதாகவும் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

Advertisement