அண்டர் 19 உலகக்கோப்பையில் சாதித்த இளம் வீரர் – இந்தியாவுக்கு அடுத்த கபில் தேவ் கிடைத்துவிட்டாரா?

Bawa
- Advertisement -

மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்று வந்த 14வது ஐசிசி அண்டர் 19 உலக கோப்பையை “யாஷ் துள்” தலைமையிலான இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது. முன்னதாக கடந்த ஜனவரி மாதம் துவங்கிய ஐசிசி அண்டர் 19 உலகக்கோப்பை 2022 கிரிக்கெட் தொடரில் குரூப் பி பிரிவில் இடம் பிடித்திருந்த இந்தியா லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றுகளில் பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

U19 World Cup 2022

- Advertisement -

இதை அடுத்து நேற்று மாலை ஆன்டிகுவா நகரில் நடைபெற்ற இந்த உலக கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்தை தனது அபார பந்துவீச்சால் வெறும் 189 ரன்களுக்கு இந்தியா சுருட்டியது.

சாதித்த ராஜ் பாவா:
இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜேம்ஸ் ரெவ் 95 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிரடியாக செயல்பட்ட ராஜ் பாவா 5 விக்கெட்டுகளையும் ரவிகுமார் 4 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். இதை அடுத்து 190 என்ற இலக்கை துரத்திய இந்தியாவிற்கு ஷைக் ரஷீத் 50 மற்றும் நிஷாந்த் சித்து 50* என மிடில் ஆர்டர் பேட்டிங் வீரர்கள் பொறுப்புடன் செயல்பட்டதால் 48வது ஓவரில் 195 ரன்களை எடுத்த இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி சாம்பியன் பட்டத்தை வென்றது.

IND-u-19-1

இதற்கு முன் 2000, 2008, 2012, 2018 ஆகிய ஆண்டுகளில் இந்த உலகக் கோப்பையை வெற்றி பெற்றிருந்த இந்தியா 5-வது முறையாக இந்த வருடம் ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையை முத்தமிட்டு சரித்திர சாதனை படைத்தது. இந்தியாவின் இந்த வெற்றிக்கு இறுதிப் போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்ததுடன் முக்கியமான 35 ரன்களையும் குவித்து வித்திட்ட ராஜ் பாவா ஆட்ட நாயகன் விருதை வென்று சாதனை படைத்தார்.

- Advertisement -

சூப்பர் சாதனை:
இதன் வாயிலாக ஐசிசி அண்டர் 19 உலகக்கோப்பை வரலாற்றின் இறுதி போட்டியில் 5 விக்கெட் ஹால் எடுத்த முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற புதிய சாதனையை ராஜ் பாவா படைத்துள்ளார். ஐசிசி அண்டர் 19 உலகக் கோப்பை பைனலில் இந்திய பவுலர்களின் சிறந்த பவுலிங் இதோ:
1. 5/31 – ராஜ் பாவா, 2022*
2. 4/8 – பியூஸ் சாவ்லா, 2006.
3. 4/30 – ரவி பிஸ்னோய், 2020.
4. ரவி குமார், 2022*.
5. 4/54 – சந்தீப் சர்மா, 2012.

raj bawa

இது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அண்டர் 19 உலக கோப்பை வரலாற்றில் பைனலில் 5 விக்கெட் ஹால் எடுத்த 2வது பவுலர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இதற்கு முன் கடந்த 2006 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் பாகிஸ்தானின் அன்வர் அலி 5/35 எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கபில் தேவ் கிடைத்துவிட்டாரா:
இது மட்டுமல்லாமல் இந்த உலக கோப்பையில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 252 ரன்களுடன் இந்த உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்த 2வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். மேலும் 6 போட்டிகளிலும் பந்துவீசிய இவர் 9 விக்கெட்டுகளை எடுத்து இந்த உலக கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது இந்திய பந்து வீச்சாளராக திகழ்கிறார். ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் இருந்து இந்தியாவுக்காக விளையாடும் இவர் ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக இந்த உலக கோப்பையில் அசத்தியுள்ளது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் முன்னாள் கேப்டன் கபில்தேவுக்கு பின் ஒரு நல்ல வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இன்றுவரை இந்தியாவிற்கு கிடைக்கவே இல்லை.

kapildev

அவரின் இடத்தில் இர்பான் பதான், ஹர்டிக் பாண்டியா போன்ற எத்தனையோ வீரர்களை இந்தியா முயற்சித்த போதிலும் இது நாள் வரை முழு பலன் கிடைக்கவில்லை என்பதே உண்மையாகும். அந்த நிலையில் நீண்ட காலமாக இந்தியா தேடிவரும் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கேள்விக்கு ராஜ் பாவா தகுதியானவர் என இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். எனவே இந்த உலக கோப்பையில் வேகப்பந்து வீச்சாளராக அசத்தியுள்ள ராஜ் பாவாவை வருங்காலத்தில் இந்திய சீனியர் அணியில் தொடர்ச்சியான வாய்ப்புகளைக் கொடுத்து வளர்த்தால் நிச்சயம் கபில்தேவ் இடத்தை நிரப்ப கூடியவராக இருப்பார் என நம்பலாம்.

Advertisement