2024 டி20 உ.கோ இந்திய அணியில் ஓட்டையிருக்கு.. முடிஞ்சதும் ருதுராஜ், அபிஷேக்கை கொண்டு வாங்க.. சைமன் டௌல்

Simon Doull
- Advertisement -

ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. அந்தத் தொடரில் விளையாடுவதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அமெரிக்கா பயணித்துள்ளது. இதைத் தொடர்ந்து 2007க்குப்பின் 17 வருடங்கள் கழித்து கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடரில் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்தும் முனைப்புடன் இந்தியா விளையாட உள்ளது.

முன்னதாக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ரிங்கு சிங் தேர்வு செய்யப்படாதது பல முன்னாள் வீரர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதே போல இடது கை வேகப்பந்து வீச்சாளராக நல்ல ஃபார்மில் இருக்கும் தமிழக வீரர் நடராஜன் தேர்வு செய்யப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது 4 ஸ்பின்னர்கள் எதற்கு? என்று முன்னாள் கேள்வி எழுப்பிய முன்னாள் தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் அதற்கு பதிலாக ரிங்கு சிங்கை தேர்ந்தெடுத்திருக்கலாம் என்று விமர்சித்தார்.

- Advertisement -

சைமன் டௌல் கருத்து:
இந்நிலையில் இந்திய அணியில் டாப் 5 பேட்ஸ்மேன்களில் யாருமே பந்து வீசுபவர்களாக இல்லை என்பது பெரிய ஓட்டையாக இருப்பதாக முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டௌல் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த உலகக் கோப்பை முடிந்ததும் முத்த வீரர்களுக்கு பதிலாக டி20 அணியில் ருதுராஜ் போன்ற இளம் வீரர்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக அபிஷேக் சர்மா போன்ற ஆல்ரவுண்டர்கள் இந்திய அணியில் அதிகமாக உருவாக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு. “டி20 அணியில் டாப் 5 – 6 பேட்ஸ்மேன்களில் ஒரு ஜோடி பவுலர்கள் இல்லாதது பெரியளவில் இந்தியா தவற விட்ட ஒரு விஷயம். வெஸ்ட் இண்டீஸ்க்கு செல்லும் தற்போதைய அணியில் உலகக் கோப்பை முடிந்ததும் நீங்கள் எதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும்”

- Advertisement -

“அது போன்ற சூழ்நிலையில் அபிஷேக் சர்மா, ருதுராஜ், ஜெய்ஸ்வால் அல்லது சுப்மன் கில் ஆகியோரை நீங்கள் விரும்புவீர்கள். சூரியகுமார் யாதவ் தொடர்ந்து இருப்பார் என்று நினைக்கிறேன். மேலும் சிவம் துபே போன்ற பந்து வீசக்கூடிய சில வீரர்கள் டாப் 5 பேட்ஸ்மேன்களில் இருக்க வேண்டும். அதைத் தொடர்ந்து 2 – 3 ஆல் ரவுண்டர்கள், கணிசமாக பேட்டிங் செய்யக்கூடிய பவுலர்கள் இருக்க வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: முதல் சீசனில் தோனியிடம் 2 விஷயம் கத்துக்கிட்டேன்.. கேப்டனா மாறினாலும் அதுல மாறமாட்டேன்.. ருதுராஜ் பேட்டி

அந்த வகையில் ரெய்னா, சேவாக், யுவராஜ், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரை போல் தற்போதைய பேட்ஸ்மேன்கள் பகுதி நேர பவுலர்களாக இல்லை என்பது சமீப காலங்களாகவே இந்திய அணியில் பின்னடைவாக இருக்கிறது. எனவே 2024 டி20 உலகக் கோப்பை முடிந்ததும் ரோஹித், விராட் போன்ற சீனியர்கள் விலகுவார்கள் என்று நம்பப்படுகிறது. அப்போது அபிஷேக் சர்மா போன்றவர்களை இந்திய அணியில் சேர்ப்பது நல்ல முடிவாக இருக்கும்.

Advertisement