காயம் காரணமாக தென்னாப்பிரிக்க தொடரில் இருந்து வெளியேறிய ரோஹித் சர்மா – மாற்றுவீரர் அறிவிப்பு

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது வரும் 26-ஆம் தேதி செஞ்சூரியன் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே பிசிசிஐ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதில் விராட் கோலி கேப்டனாகவும், துணை கேப்டனாக ரோஹித் சர்மாவும் அறிவிக்கப்பட்டனர். மேலும் கோலியின் தலைமையின் கீழ் 18 வீரர்கள் அடங்கிய அணியும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் தற்போது மும்பையில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த இந்திய வீரர்களில் ரோகித் சர்மா பயிற்சியின்போது கையில் காயம் அடைந்துள்ளார். தற்போது காயத்தின் தன்மை அதிகரித்ததன் காரணமாக அவர் இந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார் என்பதை பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

- Advertisement -

மேலும் துணை கேப்டனாக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டு இருந்த வேளையில் தற்போது அவருக்கு பதிலாக மீண்டும் ரஹானே துணை கேப்டனாக செயல்படுவார் என்று தெரியவந்துள்ளது. இந்த டெஸ்ட் தொடர் முடிவடைந்து நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கேப்டனாகவும் ரோகித் அறிவிக்கப்பட்டிருந்தார்.

நிலையில் தற்போது டெஸ்ட் தொடரை தவறவிட்ட ரோஹித் சர்மா ஒருவேளை ஒருநாள் தொடரையும் தவறவிடும் பட்சத்தில் ஒருநாள் அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

- Advertisement -

இதையும் படிங்க : INDvsRSA : முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் – இப்படியா ஆகனும்?

தற்போதைய நிலையில் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இருந்து ரோகித் வெளியேறியுள்ளதால் அதன் காரணமாக மாற்று வீரராக குஜராத்தை சேர்ந்த பிரியங்க் பான்சல் என்ற வீரரை மாற்றுவீரராக பிசிசிஐ அறிவித்துள்ளது. 2021ஆம் ஆண்டு 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 906 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement