INDvsRSA : முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் – இப்படியா ஆகனும்?

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது வரும் 26-ஆம் தேதி செஞ்சூரியன் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பின்னர் நேற்று மும்பையில் தங்களது குவாரன்டைன் நாட்களை துவங்கியுள்ளனர். மூன்று நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு 16ஆம் தேதி இந்திய அணி மும்பையில் இருந்து தென் ஆப்பிரிக்கா நாட்டிற்கு பயணிக்கும் என்று இந்திய கிரிக்கெட் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டது.

IND

- Advertisement -

இந்நிலையில் மும்பையில் குவாரன்டைனின் போது பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி ரோகித் பேட்டிங் செய்து கொண்டிருக்கையில் இந்திய அணியின் த்ரோ ஸ்பெஷலிஸ்ட் ராகவேந்திரா என்பவர் ரோகித் சர்மாவிற்கு பந்து வீசி பயிற்சி அளித்துள்ளார்.

அப்போது அவர் வீசிய ஒரு பந்து ரோகித் சர்மாவின் கிளவில் வேகமாக தாக்கியதால் அப்போதே ரோகித் சர்மா வலியை உணர்ந்து கூறப்படுகிறது. அதன்பின்னர் மீண்டும் வலி இருந்ததன் காரணமாக அவர் பயிற்சியிலிருந்து வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Rohith

ஒருவேளை ரோகித் சர்மா 100% ஃபிட்டாக இல்லை என்றால் இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியையும் அவர் தவறவிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இன்னும் போட்டிக்கு 10 நாட்கள் வரை அவகாசம் இருப்பதால் நிச்சயம் அவர் காயம் குணமடைந்து விளையாடுவார் என்று தெரிகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரில் இவரை சேருங்க. வேறலெவலில் பேட்டிங் பண்ணுவாரு – வெங்சர்க்கார் பேட்டி

இருப்பினும் இது குறித்த முடிவுகளை மருத்துவ குழு தான் எடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஒருவேளை அவருக்கு மீண்டும் வலி இருக்கும் பட்சத்தில் அவர் இந்த தொடரை தவிரவும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement