காயத்திலிருந்து மீண்ட ரோஹித் சர்மா! எப்போது இந்திய அணிக்கு திரும்புகிறார்? – வெளியான ஹேப்பி நியூஸ்

Rohith
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கு அந்த அணிக்கு எதிராக 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக இருந்த போதிலும் 2 க்கு 1 என்ற கணக்கில் இந்தியா இழந்தது. இதை தொடர்ந்து இந்த சுற்றுப்பயணத்தில் இரண்டாவதாக நடைபெற உள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் ஜனவரி 19ஆம் தேதி முதல் துவங்க உள்ளது.

Bhuvi-1

- Advertisement -

கேப்டன் ரோஹித் சர்மா:
முன்னதாக இந்த சுற்றுப்பயணம் துவங்குவதற்கு முன்பாகவே இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலியின் பதவி பறிக்கப்பட்டு அந்த பதவி துணைக் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த நேரத்தில் தென்ஆப்பிரிக்கா சுற்றுப் பயணத்திற்கு தயாராகும் வண்ணம் மும்பையில் பயிற்சி மேற்கொண்டிருந்த ரோகித் சர்மா காயம் அடைந்தார். இந்த காயம் பெரிய அளவில் ஏற்பட்டதால் ஒட்டுமொத்த தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் இருந்து அவர் விலகுவதாக பிசிசிஐ அறிவித்தது.

இந்தியாவுக்கு பின்னடைவு:
இதனால் தென்ஆப்பிரிக்க ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டார். கடந்த சில வருடங்களாகவே எதிரணிகளை பந்தாடி ரன்களை குவித்து இந்தியாவுக்கு வெற்றி தேடி வந்த ரோகித் சர்மா தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் காயத்தால் விலகியது இந்திய அணிக்கு பின்னடைவை கொடுத்தது எனலாம். அதன்படியே டெஸ்ட் தொடரில் இந்தியா எதிர்பாராத தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் காயத்தால் அவதிப்பட்டு வரும் ரோகித் சர்மா எப்போது இந்திய அணிக்கு திரும்புவார் என்ற செய்தி இன்று வெளியாகியுள்ளது.

rohith 1

பெங்களூருவில் ரோஹித்:
இந்திய வெள்ளைப்பந்து அணியின் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்பதற்கு முன்னரே காயமடைந்த ரோகித் சர்மா தற்போது அதிலிருந்து மீள்வதற்காக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் முகாமிட்டுள்ளார். கடந்த ஒரு மாதமாகவே அங்கு தங்கி பயிற்சிகளை மேற்கொண்டு வரும் அவர் தேசிய கிரிக்கெட் அகடமியின் புதிய இயக்குனராக பொறுப்பேற்றுள்ள ஜாம்பவான் விவிஎஸ் லக்ஷ்மன் மேற்பார்வையில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

- Advertisement -

எப்போது திரும்புகிறார்:
காயத்தில் இருந்து வேகமாக குணமடைந்து வரும் ரோகித் சர்மா வரும் பிப்ரவரி மாதம் சொந்த மண்ணில் நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணிக்கு திரும்ப உள்ளார் என தேசிய கிரிக்கெட் அகடமியில் உள்ள முக்கிய பிசிசிஐ நிர்வாகி தெரிவித்துள்ளார்.

rohith 1

வரும் பிப்ரவரி 6 முதல் 12ஆம் தேதி வரை வெஸ்ட் இண்டீசை 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் எதிர்கொள்ளும் இந்தியா அதன்பின் வரும் பிப்ரவரி 15 முதல் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ள 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் சந்திக்க உள்ளது.

- Advertisement -

டெஸ்ட் கேப்டன்:
அந்த தொடரில் ரோகித் சர்மா கேப்டனாக மீண்டும் இந்திய அணியில் இணைய உள்ளதால் இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அத்துடன் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகி உள்ளதால் அந்த பதவியும் அனுபவம் வாய்ந்த ரோஹித் சர்மாவிடம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : ஒருநாள் தொடருக்கான அணியில் இருந்து திடீரென வெளியேறிய நட்சத்திர வீரர் – அதிகாரபூர்வ அறிவிப்பு

அடுத்ததாக வரும் மார்ச் மாதம் சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. அதற்கு முன்பாக வரும் பிப்ரவரி மாதத்துக்குள் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் யார் என்பது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement