ஒருநாள் தொடருக்கான அணியில் இருந்து திடீரென வெளியேறிய நட்சத்திர வீரர் – அதிகாரபூர்வ அறிவிப்பு

Kohli-1
- Advertisement -

தென் ஆப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்துள்ளது. இந்த தொடரில் 2 க்கு 1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இதன் காரணமாக டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி தரும் விதமாக தற்போது ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி தயாராக காத்திருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது இன்று ஜனவரி 19-ஆம் தேதி போலந்து பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது.

Bhuvi-1

- Advertisement -

இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மா காயம் காரணமாக வெளியேறி உள்ளதால் அவருக்கு பதிலாக கே.எல் ராகுல் தலைமையில் இந்திய அணி செயல்பட உள்ளது. முதல்முறையாக கேப்டன் பதவியை ஏற்றிருக்கும் ராகுல் இது தொடரில் எவ்வாறு செயல்படப்போகிறார் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

ஏற்கனவே தென் ஆப்பிரிக்க அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றி உள்ளதால் இந்த ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் உத்வேகத்துடன் களமிறங்கும். அதே வேளையில் இந்திய அணி நிச்சயம் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் முயற்சியில் இறங்கும் என்பதால் இரு அணி ரசிகர்களுக்குமே இந்த தொடரானது சிறப்பான விருந்தாக அமையும் என்றே கூறலாம். இந்நிலையில் இந்த ஒருநாள் தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ககிசோ ரபடா வெளியேற்றப்பட்டுள்ளார் என்ற செய்தியை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

Rabada

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் : ரபாடா தொடர்ந்து பல சர்வதேச போட்டிகளில் விளையாடி வருவதால் பணிச்சுமை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அவருக்கு ஓய்வு அளிக்கும் வகையில் இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : தோனி, கோலி ரெண்டுபேர் கீழயும் விளையாடுனவன் நான். எனக்கு இதில் எந்த பயமும் இல்ல – ராகுல் அதிரடி

இதன் காரணமாக தற்போது இந்திய அணிக்கு ஒரு சாதகம் என்றே கூறலாம். ஏனெனில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ரபாடா தொடர்ச்சியாக விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடியவர். அவர் இந்த தொடரில் இடம் பெறாதது இந்திய அணிக்கு ஒரு அனுகூலம் என்றே கூறலாம்.

Advertisement