தோனி, கோலி ரெண்டுபேர் கீழயும் விளையாடுனவன் நான். எனக்கு இதில் எந்த பயமும் இல்ல – ராகுல் அதிரடி

Rahul
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்க உள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜனவரி 19ஆம் தேதி இன்று முதல் துவங்குகிறது. இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு தென்னாப்பிரிக்காவில் உள்ள பார்ல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. முன்னதாக இந்த சுற்றுப்பயணத்தில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக இருந்த போதிலும் இழந்தது. இதனால் இந்த ஒருநாள் தொடரிலாவது இந்தியா வெல்லுமா என இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Bhuvi-1

- Advertisement -

புதிய கேப்டன் ராகுல்:
இந்த தொடருக்கு முதலில் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார் ஆனால் அவர் காயத்தால் விலகியதை அடுத்து அவருக்கு பதில் புதிய கேப்டனாக அனுபவமில்லாத கேஎல் ராகுல் செயல்பட உள்ளார். துணை கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா செயல்பட உள்ளார். இந்த தொடருக்கு இதற்கு முன் இந்திய ஒருநாள் அணிக்கு கேப்டன்ஷிப் செய்த அனுபவம் இல்லாத கேஎல் ராகுல் முதல் முறையாக தலைமை தாங்க உள்ளதால் அவர் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவால் வெற்றி பெற முடியுமா என்ற சந்தேகம் இந்திய ரசிகர்களுடைய நிலவுகிறது.

பயம் இல்லை:
இந்நிலையில் முதல் முறையாக கேப்டன்ஷிப் செய்ய உள்ளதால் அதை பற்றி எந்தவித பயமும் தயக்கமும் இல்லை என புதிதாக கேப்டனாக பொறுப்பேற்றுள்ள கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். இது பற்றி இன்று நிகந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசுகையில், “அடுத்து வரும் அனைத்துப் போட்டிகளையும் எப்போதும் போல் எதிர்கொள்ள உள்ளேன். இதுபற்றி மகிழ்ச்சி அல்லது கவலைப்படும் ஒருவர் நான் இல்லை. எந்த முடிவாக இருந்தாலும் அதில் சமநிலையில் இருக்க விரும்புகிறேன், ஜோகனஸ்பர்க் டெஸ்ட் போட்டியில் நிறைய பாடங்களை கற்றுள்ளேன்”

rahul 2

புதிதாக கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளதால் எந்தவித தயக்கமும் அடையவில்லை என தெரிவித்தார். அத்துடன் கடந்த சில வாரங்களுக்கு முன் ஜோகனஸ்பர்க் நகரில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி காயத்தால் விலகியபோது இந்தியாவிற்காக முதல் முறையாக கேப்டன்ஷிப் செய்த அனுபவம் உதவும் எனவும் கூறியுள்ளார்.

- Advertisement -

தோனி, கோலி பார்முலா:
“எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி போன்ற மகத்தான கேப்டன்களுக்கு கீழ் நான் விளையாடி நிறைய அனுபவங்களை கற்றுள்ளேன். நானும் மனிதன் தான், நானும் ஒரு சில தவறுகளை செய்வேன். ஆனால் அதிலிருந்து பாடங்களை கற்றுக் கொண்டு சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன். இந்த வகையில் தான் தற்போது எனது மன நிலை உள்ளது. முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவிற்கு தலைமை தாங்குவது மிகச் சிறந்த வாய்ப்பாகும்.

rahul 2

அத்துடன் அடுத்த டெஸ்ட் கேப்டனாக வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அதையும் சிறப்பாக செய்வேன்” என இது பற்றி மேலும் தெரிவித்த கேஎல் ராகுல் முன்னாள் கேப்டன்கள் எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோரின் கீழ் அதிகமாக விளையாடி உள்ளதால் அவர்களிடம் இருந்து கற்ற பாடங்களை இந்தியாவிற்கு கேப்டன்ஷிப் செய்யும்போது உபயோகப்படுத்த உள்ளதாக கூறினார்.

இதையும் படிங்க : முதல் போட்டி நடக்கும் பார்ல் மைதானம் எப்படி இருக்கும்? – நமக்கு சாதகமா? பாதகமா?

டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியுள்ளதால் இந்தியாவின் அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்ற கேள்வி நிலவி வருகிறது. ஒருவேளை அந்த பதவி தமக்கு கிடைத்தால் அதையும் மிகச் சிறப்பாக மகிழ்ச்சியுடன் செய்வேன் என ராகுல் தெரிவித்துள்ளார்.

Advertisement