கிரிக்கெட் வீரர்கள் ஒன்னும் மெஷின் கிடையாது. கொஞ்சம் புரிஞ்சிக்கோங்க – புதுக்கேப்டன் ரோஹித் பேட்டி

Rohith
- Advertisement -

இந்திய அணியானது அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ள 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் கலந்து கொண்டு விளையாடுகிறது. கடந்த நவம்பர் 14-ஆம் தேதி நடைபெற்ற டி20 உலககோப்பையின் இறுதிப்போட்டியில் விளையாடிய நியூசிலாந்து அணியானது அடுத்த இரண்டு நாட்கள் இடைவெளியில் தற்போது மீண்டும் இந்திய அணிக்கு எதிராக இந்த டி20 தொடரில் கலந்து கொள்கிறது. இந்நிலையில் நாளை 17 ஆம் தேதி துவங்கும் இந்த தொடருக்கு முன்பாக காணொளியில் வாயிலாக இந்திய அணியின் புதிய கேப்டன் ரோகித் சர்மா பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

INDvsNZ

- Advertisement -

அதில் அணி வீரர்கள் குறித்தும் பல்வேறு விடயங்களையும் அவர் பகிர்ந்துகொண்டார். ஏற்கனவே உலக கோப்பை தொடருடன் டி20 கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகியதால் தற்போது ரோகித் சர்மா இந்திய அணியை வழிநடத்த உள்ளார். இந்நிலையில் இந்த நியூசிலாந்து தொடர் குறித்தும் சீனியர் வீரர்களின் ஓய்வு குறித்தும் பேசிய ரோஹித் சர்மா கூறுகையில் : கிரிக்கெட் வீரர்கள் ஒன்றும் மிஷின் கிடையாது. வீரர்களுக்கு ஓய்வு என்பது நிச்சயம் அவசியம்.

ஏனெனில் நாங்கள் தொடர்ச்சியாக பல போட்டிகளில் விளையாடி வருகிறோம். அதுமட்டுமின்றி தற்போது நடைபெற உள்ள டி20 போட்டிகளும் ஒருநாள் விட்டு ஒருநாள் என அடுத்தடுத்து நடைபெற இருக்கிறது. அதுமட்டுமின்றி டெஸ்ட் போட்டிகளுக்கும் இடையில் நான்கு நாட்கள்தான் இடைவெளி இருக்கிறது. இதன் காரணமாக வீரர்களின் பணிச்சுமையை குறைப்பது அவசியமான ஒன்று. அதுமட்டுமின்றி வீரர்கள் ஒன்றும் மெஷின் கிடையாது தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்க அதனால் சரியான அளவில் வீரர்களுக்கு ஓய்வு என்பது அவசியம்.

Kohli

சில வீரர்களுக்கு சற்று நீண்ட ஓய்வு இருந்தால்தான் மீண்டும் அவர்களால் புத்துணர்ச்சியுடன் அணியில் இணைந்து விளையாட முடியும். மனதளவில் புத்துணர்ச்சியோடு இருப்பது எதிர்வரும் சவால்களை சந்திக்க உதவும் என்று ரோஹித் சர்மா குறிப்பிட்டார். ஏற்கனவே இந்த டி20 தொடரில் விராட் கோலி, பும்ரா, ஷமி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஓய்வு எடுத்துக்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் திரும்ப உள்ளனர்.

- Advertisement -

இதையும் படிங்க : அந்த நியூஸை கேட்டதும் 2-3 நாள் நான் ரொம்ப உடைஞ்சிட்டேன் – முதன்முறையாக மனம்திறந்த யுஸ்வேந்திர சாஹல்

அதிலும் குறிப்பாக கோலி 2-வது டெஸ்ட் போட்டியில் தான் அணியில் இணைகிறார். அதேபோன்று நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சனும் தொடர்ச்சியான போட்டிகளில் விளையாடி வருவதால் டி20 தொடரில் இருந்து ஓய்வு எடுத்துக் கொண்டுள்ளார். அதே வேளையில் அவரும் டெஸ்ட் தொடரில் அணிக்கு திரும்புவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement