அந்த நியூஸை கேட்டதும் 2-3 நாள் நான் ரொம்ப உடைஞ்சிட்டேன் – முதன்முறையாக மனம்திறந்த யுஸ்வேந்திர சாஹல்

Chahal
- Advertisement -

இந்திய அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக கடந்த பல ஆண்டுகளாக விளையாடி வரும் யுஸ்வேந்திர சாஹல் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படவில்லை. அதனை தொடர்ந்து தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்திருந்த அஷ்வின், ராகுல் சாகர், வருண் சக்கரவர்த்தி என யாரும் பெரிய அளவில் உலகக் கோப்பையின் போது தங்களது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தவில்லை.

Chahal

- Advertisement -

இதன்காரணமாக சாஹலை ஏன் உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யவில்லை என்ற கேள்வி அதிகளவு எழுந்து வருகிறது. இந்நிலையில் தற்போது தான் டி20 உலக கோப்பை தொடருக்கான அணியில் நீக்கப்பட்டபோது தனது மனநிலை எவ்வாறு இருந்தது என்பது குறித்து யுஸ்வேந்திர சாஹல் வெளிப்படையாக சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

நான் நான்கு ஆண்டுகளாக அணியிலிருந்து நீக்கப்படாமல் தொடர்ச்சியாக விளையாடி வந்தேன். ஆனால் டி20 உலகக் கோப்பை போன்ற ஒரு பெரிய தொடரில் என்னை நீக்கியது எனக்கு மிகவும் மன வருத்தத்தை தந்தது. நான் டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இல்லை என்று தெரிந்ததும் இரண்டு மூன்று நாட்கள் மிகவும் மனம் உடைந்து விட்டேன்.

Chahal

இருப்பினும் ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாகத்தில் சிறப்பாக செயல்படுவதன் மூலம் மீண்டு வருவோம் என்று நினைத்தேன் .ஆனால் ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாகத்தில் சிறப்பாக செயல்பட்டும் எனக்கு உலக கோப்பை வாய்ப்பு கிடைக்கவில்லை என்று தனது வருத்தத்தை தந்தது என்று தனது மனக்குமுறலை பகிர்ந்து கொண்டார்.

- Advertisement -

இதையும் படிங்க : அடுத்த டி20 உலககோப்பையில இவங்க 2 பேர் தான் கீ பிளேயர்ஸ். கலக்குவாங்க பாருங்க – ஹர்பஜன் ஓபன்டாக்

இந்நிலையில் சாஹலுக்கு பதிலாக உலக கோப்பையில் அணியில் இடம்பெற்ற வருன் சக்கரவர்த்தி பெரிய அளவில் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவரால் எதிர்பார்த்த அளவு சிறப்பாக விளையாட முடியாமல் போனது. அதனால் தற்போது நடைபெறும் நியூசிலாந்து தொடரில் வருன் சக்ரவர்த்தி, ராகுல் சாஹர் ஆகியோர் நீக்கப்பட்டு மீண்டும் சாஹலுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement