விராட் கோலியின் செயலால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள். கேப்டன் ரோஹித்தும் வருத்தம் – என்ன நடந்தது?

Kohli-1
- Advertisement -

ரசிகர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று துவங்கிய இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டியில் விராத் கோலி பங்கேற்றதன் மூலம் வெற்றிகரமாக 100 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற 12-வது இந்திய வீரர் என்ற மகத்தான சாதனைக்கு சொந்தக்காரராக மாறினார். மொகாலி மைதானத்தில் இன்று துவங்கிய இந்த முதலாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக 100-வது போட்டியில் விளையாடும் விராட் கோலிக்கு இந்திய அணியின் பயிற்சியாளர் டிராவிட்டின் கையால் 100வது டெஸ்ட் போட்டியின் கேப் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Kohli-1

- Advertisement -

அதனைத் தொடர்ந்து டிராவிட் விராட் கோலியை வாழ்த்தி சில கருத்துக்களையும் பகிர்ந்தார். அதேபோன்று விராத் கோலியும் தனது ரசிகர்களுக்கு சில நெகிழ்ச்சியான கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அதன் பின்னர் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்கள் குவித்தது.

இன்றைய போட்டியில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 97 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் மற்றும் 4 சிக்ஸர்கள் என 96 ரன்களை குவித்து ஆட்டமிழந்து வெளியேறினார். மூன்றாவது இடத்தில் இறங்கிய விகாரி 58 ரன்களும், கேப்டன் விராட் கோலி 45 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதேசமயத்தில் ஜடேஜா 45 ரன்களுடனும், அஸ்வின் 10 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

Pant

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக சதம் அடிக்காமல் தவித்து வரும் விராட் கோலி அவரது இந்த வரலாற்று சிறப்புமிக்க 100-வது டெஸ்ட் போட்டியில் நிச்சயம் சதம் அடிப்பார் என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது விருப்பத்தைத் தெரிவித்து இருந்தனர். அதுமட்டுமின்றி மைதானத்திற்கு வந்திருந்த ரசிகர்களும் விராட் கோலி நிச்சயம் சதம் அடிக்க வேண்டும் என்ற பெரிய ஆசையுடன் போட்டியை கண்டு களித்தனர்.

- Advertisement -

அதன்படி இந்த முதல் இன்னிங்சை சிறப்பாக துவங்கிய விராட்கோலி 76 பந்துகளை சந்தித்த வேளையில் 5 பவுண்டரிகளை அடித்து இருந்தாலும் எதிர்பாராத விதமாக இலங்கை சுழற்பந்து வீச்சாளர் எம்புல்டேனியா பந்து வீச்சில் 45 ரன்கள் எடுத்திருந்தபோது கிளீன் போல்டாகி ஆட்டமிழந்து வெளியேறினார். விக்கெட் விழுந்த அந்த குறிப்பிட்ட பந்து சற்று நின்று திரும்பியதை கணிக்கத் தவறிய விராட் கோலி ஸ்டம்பை பறி கொடுத்தார்.

kohli

அவர் ஆட்டமிழந்த அந்த பந்தினை அவராலேயே நம்ப முடியவில்லை. அந்த அளவிற்கு சிறப்பான பந்தில் அவர் ஆட்டமிழந்து வெளியேறினார். இப்படி 45 ரன்களில் விராட் கோலி அவுட் ஆனது பார்த்த மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அதேவேளையில் வீரர்களின் ஓய்வறையில் இருந்த கேப்டன் ரோகித்தும் மீண்டும் ஒருமுறை விராட் கோலி அவுட் ஆனதை நினைத்து அதிலும் இந்த 100-வது போட்டியில் அசத்தலாக ஆடுவார் என்று அவர் எதிர்பார்த்திருந்த வேளையில் விராட் கோலி ஆட்டம் இழந்ததால் சற்று வருத்தத்துடன் காணப்பட்டார்.

இதையும் படிங்க : அதிரடியில் வெளுத்து வாங்கிய ரிஷப் பண்ட். ஆனாலும் சகட்டு மேனிக்கு திட்டும் ரசிகர்கள் – ஏன் தெரியுமா?

பின்னர் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பை வழங்கினாலும், ரசிகர்கள் சோகமாக இருந்த அந்த ஒருசில நொடிகளையும், கேப்டன் ரோகித் வருத்தம் தெரிவித்த சில நொடிகளும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. விராட் கோலி சதத்தை தவறிவிட்டது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கேப்டன் ரோஹித் மட்டுமின்றி அதனை தாண்டி ரசிகர்களாகிய நமக்கும் பெரிய வருத்தத்தை அளித்துள்ளது என்றே கூறலாம்.

Advertisement